பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 3.25

கொண்டார். அடியார்கள் அன்பினுற் சொல்லிய குறை களே யறிந்து முடித்தருள வல்ல திருத்துருத்தி பிறை வர் வன்ருெண்டரை நோக்கி நீ இத்திருக்கோயிலின் வடபாலுள்ள திருக்குளத்திற் குளிப்பாயாக எனப் பணித்தருளினர். அவ்வருள் மொழியைச் செவிமடுத்த சுந்தரர் இறைவரைத் தொழுது சென்று அத்தீர்த்தத் துள் மூழ்கி நோய் நீங்கி எழுந்து ஒளிதிகழும் திருமேனி யுடன் கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறித் துய ஆடையுடுத்துத் திருக்கோயிலே வலம் வந்து,

மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி

வெடிபடக் கரையொடுந் திறைகொணர்ந்தெற்றும் அன்னமாங் காவிரி யகன் கரை யுறைவார்

அடியினேதொழுதெழும் அன்பராம் அடியார் சொன்ன வாறறிவார் துருத்தியார் வேள்விக்

குடியுளா ரடிகளேச் செடியனேன் நாயேன் என்னே நான் மறக்குமா றெம்பெருமானே

என்னுடம்படும் பிணியிடர் கெடுத்தானே.

எனவரும் பண்ணிறைந்த திருப்பதிகத்தினேப் பாடித் திருத்துருத்தியிலும் அதற்கு அண்மையிலுள்ள திரு வேள்விக் குடியிலும் கோயில் கொண்டெழுந்தருளிய இறைவரது திருவருளேப் பரவிப் போற்றினர். இத் திருப்பதிகத்தில்,

‘ என்னுடம்படும் பிணி இடர் கெடுத்தானே'

என வும்,

  • உற்ற நோய் இற்றையே புறவொழித்தானே ? எனவும்,

தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர்வறுத்தானே ? எனவும் வரும் தொடர்களால் சொன்னவாறறிவாரைப் பாராட்டி மகிழ்தலால் திருத்துருத்தியில் உடல்நோய் நீங்கப்பெற்ற நிலையில் நம்பியாரூரர் இத்திருப்பதிகத் தைப் பாடியிருத்தல் வேண்டுமென்பது நன்கு துணி