பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358

பன்னிரு திருமுறை வரலாறு


ந ம் பி ய | ரூ ர் திருவஞ்சைக் களத்திறைவரை வணங்கச் சென்ற பொழுது மன வாழ்க்கையை அறவே வெறுத்து இறைவன் திருவடிகளிற் சேரும் பரு வேட்கையுடை யராய் அ ஞ் ைசக் களத் த ப் பனே ப் பணிந்து வேண்டினரென் பது.

வெறுத்தேன்மனே வாழ்க்கையை விட் டொழிந்தேன்

விளங்குங் குழைக்காதுடை வேதியனே இறுத்தாய் இலங்கைக் கிறையாயவனே த் தலைபத்தொடு தோள்பல இற்றுவிழக் கறுத்தாய் கடல்நஞ் சமுதுண்டுகண்டம்

கடுகப்பிரமன் தலேயைந் திலுமொன் நறுத்தாய் கடலங் கரை மேன் மகோதை

அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

எனத் திருவஞ்சைக்களத்திறைவனைப் பரவிய திருப் பாடலால் இனிது புலம்ை.

எல்லா வுலகங்களையும் பேரூழிக்காலத்தே ஒரு சேர அழித்தலாகிய மகாசங்காரத் தொழிலை மேற் கொண்டமையால் நொடித்தான்' ன்ற காரண, ப், பெயரு ட ன் திருக்கயிலாய மலையில் எழுந்தருளி யிருக்கும் சிவபெருமான், மனே வாழ்க்கையினே அறவே வெறுத்துத் தன்னேச் சரணடைந்த நம்பியாரூரர்க்கு அருள்புரியத் திருவுளங்கொண்டு அவரைக் கயிலாய மலேக்கு அழைத்துவரும்படி தேவர்களுடன் வெள்ளே யானையை அனுப்பியருளினரென்பது, அவரது அழைப் பினயேற்று கயிலைக்குச் செல்லும் நம்பியாரூரர் இறைவ னருளால் தாம் பெற்ற பெருஞ் சிறப்பினே க் குறித்துப் பாடிய 'தானெனே முன் படைத் தான் என்ற திருப் பதிக த்தால் இனிது விளங்கும். கயிலேப் பெருமானது ஆணே யால் களிற்றுடன் வந்த அ ம ர் க ள் ,

1. நொடித்தல் - அழித்தல், நொடித்தான் - மகா சங்காரகாரண கிைய சிவபெருமான். அவ்விறைவன் எழுந் தருளிய திருமலே கயிலையாதலால் அது நொடித்தான் மலே யென்னும் பெயர்த்தாயிற்று.