பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்தித் சுவாமிகள் வரலாறு 357

திருக்க வந்தது எது கருதி என வினவியருளினர். அது கேட்ட சேர வேந்தர், இறைவனே யிறைஞ்சி ‘எம்பெருமானே, அடியேன் நம்பியாரூரருடைய திருவடிகளைப் போற்றி அவரேறிய வெள்ளானேக்கு முன் அவரைச் சேவித்துக்கொண்டு வந்தேன். தினது திருவருட் பெருவெள்ளம் அடியேனே ஈர்த்துக்கொண்டு புகுதலால் இங்கு நின் திருமுன் வரப்பெற்றேன். எனது பாசத்தளே யை அகற்றுதற் ெய | ரு ட் டு வன்ருெண்டரது தோழமையைத் தந்தருளிய பெரு மானே, மறைகளாலும், முனிவர்களாலும் அளவிடுதற் கரிய பெருமாளுகிய நின்னைப் பாட்டுடைத் தலைவ கைக் கொண்டு திருவுலாப்புறம் என்ற செந்தமிழ்ப் பனுவலொன்றைப் பாடி வந்துள்ளேன். இத் தமிழ்ப் பனுவலே நின் திருச்செவியில் ஏற்றருளல் வேண்டும்’ என விண்ணப்பஞ் செய்தார். அப்பொழுது சிவ பெருமான் சேரனே, அவ்வுலாவைச் சொல்லுக’ எனப் பணித்தருளினர். சேரமான் பெருமாள் நாயனரும் தாம் பாடிய செந்தமிழ்ப் பனுவலேக் கயிலேப் பெருமான் திருமுன்னர் எடுத்துரைத்து அரங்கேற்றினர். சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திருவுலாப்புறத்தை ஏற்றருளிய சிவபெருமான், அவரை நோக்கிச் சேரனே நீ நம்பியாரூரணுகிய ஆலாலசுந்தரனுடன் கூடி நீவிர் இருவீரும் நம் சிவகணத் தலைவராய் இங்கு நம்பால் நிலைபெற்றிருப்பீராக’ எனத் திருவருள் புரிந்தார். சிவபெருமான் அருளிய வண்ணம் நம்பியா ரூரர் அணுக்கத் தொண்டு புரியும் ஆலால சுந்தர ராகவும் சேரமான் பெருமாள் சிவகணத் தலைவராக வும் திருக்கயிலையில் திருத்தொண்டு புரியும் பேரின்ப வாழ்வில் திளைத்து மகிழ்ந்தார்கள்.

நம்பியாரூரரை மணந்து வாழ்ந்த பரவையாரும் சங்கிலியாரும் சிவபெருமான் திருவருளால் திருக்கயிலே ையடைந்து முறையே க ம லி னி ய | ர க வ ம் அநிந்தி ைதயாராகவும் ஆகி உமையம்மை யாருக்குத் தாங்கள் முன் செய்து வந்த அணுக்கத் தொண்டினேச் செய்து மகிழ்ந்தார்கள்.