பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374

பன்னிரு திருமுறை வரலாறு

களே வணங்கிப்பாடித் திருமறைக்காட்டில் தங்கி யிருந்தபொழுது பாண்டிநாட்டிலிருந்து மங்கையர்க் கரசியாராலும் குலச்சிறையாராலும் அனுப்பப்பட்ட து தர்கள் திருஞானசம்பந்தரை வணங்கிப் பாண்டி நாட்டுக்கு எழுந்தருளும்படி வேண்டிக்கொள்ளப் பிள்ளே யாரும் அதற்கு இசைந்து தென்றமிழ்நாட்டிற் சிவநெறி வளர்க்க எழுந்தருளினரென்றும் கூறுவர் சேக்கிழார். பிள்ளையார் தென்னுட்டிற் சென்று திரு வாலவாயிறைவர் திருவருளால் புறச்சமய இருள் நீக்கிச் சிவநெறியை நிலநாட்டிய காலத்து அவர்க்குப் பத்தாம்வயது நடைபெற்றதெனக் கொள்ளலாம். அக்காலம் கி பி. 648-ம் ஆண்டையொட்டியதாகும். கி. பி. 640 முதல் 670 வரை பாண்டிநாட்டை ஆட்சி புரிந்த வேந்தன் மாறவர்மன் அரிகேசரியென்ற பெய ருடைய பாண்டியனுவன். இவன் .ெ ச ழி ய ன் சேந்தன் என்பவனுடைய புதல்வன். இவனே ச் சுந்தர பாண்டியனெனவும் கூன் பாண்டியனெனவும் திருவிளே யாடற்புராணம் கூறும். இவன் சேர வேந்தனேயும் குறுநில மன்னர்களேயும் பாழி, நெல்வேலி, செந்நிலம் முதலான ஊர் களிற் பொருது வென்றனன் என்றும் சோழர்க்குரிய தலைநகராகிய உறையூரை ஒருபகலிற் கைப்பற்றினன் என்றும் வேள்விக்குடி செப்பேடுகள் கூறுகின்றன. இக்குறிப்பின நு, னு கி நோக்கிய ஆராய்ச்சியாளர் இவன் முதலில் சோழமன்னனே வென்று உறையூரைக் கைப்பற்றி யிருத்தல் வேண்டு மென்றும் பிறகு அவ்வளவன் வேண்டிக்கொண்டவாறு அவன் மகளார் மங்கையர்க்கரசியாரை மணந்து பகைமை யொழிந்து உறவும் நட்பும் கொண்டிருத்தல் வேண்டுமென்றும் உய்த்துணர்ந்து கூறுவர். '

மாறவர்மன் அரிகேசரியாகி: இவ்வேந்தன், முதலில் சமண சமயப் பற்றுடையவனக இருந்து

1. பாண்டியர் வரலாறு, இரண்டாம் பதிப்பு பக் 41.