பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 407

சோதியினுள் புகும் நிலையிற் பாடிய கல்லூர்ப் பெரு மணம் என்னும் திருப்பதிகமும் இம் மூன் ருந் திரு முறையில் அமைந்துள்ள அற்புதத் திருப்பதிகங் களாகும்.

ஆடிய்ை நறுநெய்யொடு பால் தயிர் அந்தணர்பிரியாத சிற்றம்பலம்

காடிய்ை இடமா நறுங்கொன்றை நயந்தவனே பாடிய்ை மறையோடு பல்கீதமும் பல்சடைப் பணிகால்

கதிர் வெண்டிங்கள்

சூடிய்ை அருளாய் சுருங்க எம தொல்வினையே’

எனத் தில்லைச் சிற்றம்பலவனைப்பரவி வினைத்தொடர் பறுக்கும் வேண்டுகோளாகிய தி ரு ப் பா ட லு ட ன் தொடங்கிய இம்மூன்ருந் திருமுறை, நல்லூர்ப் பெரு மணம் மேவிய நாதனே வழிபட்டு யாவரும் எளிதில் வீடுபேற்றினே எய்தி இன்புறும் நிலையிற் பாடிய திருப் பதிகத்தின் பயனுரைக்கும்,

" நறும்பொழிற் காழியுள் ஞானசம்பந்தன் பெறும்பத நல்லூர்ப் பெருமணத்தனை உறும்பொரு ளாற்சொன்ன் ஒண்தமிழ் வல்லார்க் கறும்பழி பாவம் அவல மிலரே ’

என வரும் திருக்கடைக்காப்புப் பாடலுடன் நிறைவு பெற்றிருத்தலை நினைக்குமிடத்து, இவ்வுலக வாழ்வில் நேரும் பழி, பாவங்களை அறுத்து நீக்கி அவலக் கவலேயி னின்றும் நீங்கி மகிழும் பேரின்ப வாழ்வாகிய வீடு பேற்றினை உலக மக்களுக்கு அளிக்கவல்ல பதிகப் பெரு வழியாக விளங்குவன, திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருவாய் மலர்ந்தருளிய இம்மூன்று திருமுறைகளும் என்ற நுட்பம் இனிது புலனுதல் காணலாம்.

முற்காலத்தில் இசைத் தமிழ் நூலார் வகுத்துக் காட்டிய நூற்றுமூன்று பண்களுள், (18) செவ்வழி, (17) தக்க ராகம், (21) நேர்திறம்.புற நீர்மை,