பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 4 : i.

எனத் திருநாவுக்கரசர் திருக்குறுக்கைத் திருநேரிசை யிற் குறித்துள்ளார். தெய்வ வழிபாட்டிற்குரிய இக் கொல்லிப் பண்ணில் திருநேரிசைப் பதிகங்களைப் பாடும் வழக்கம் உண்டென்பது, நந்தாத நேரிசையாங் கொல்லிக்கு’ எனவரும் திருமுறைகண்ட புராணத் கால் உணரப்படும். தேவாரத்தில் வரும் இத்திரு நேரிசையாப்பும் திவ்யப்பிரபந்தத்தில் வரும் திருக் குறுந்தாண்டக யாப்பும் ஒன்றே யென்பது, இவ்விரு அனுவல்களிலும் அமைந்த திருப்பாடல்களே ஒப்பு நோக்குவார்க்கு இனிது விளங்கும்.

அப்பாடிகள் அருளிய திருப்பதிகங்களில் திரு விருத்தம் என்பது, இக்காலத்தில் கட்டளைக்கலித்துறை என்ற பெயரால் வழங்கப்பெறும் யாப்பாகும். ஐஞ்சீரடி நான்காய், அடிதோறும் முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாமல் நிற்க, ஐந்தாம் சீராகிய இறுதிச்சீர் கூவிளங்காய் கருவிளங்காய் என்னும் சீர்களுள் ஒன்ரு கப்பெற்று, முதற்சீரின் முதலசை நேரசையாயின் இாடிக்கு எழுத்துப் பதினறும், நிரையசையாயின் பதி னேழெழுத்தும் உடையதாய் வரும் செய்யுள் கட்டளைக் கலித்துறை எனப்படும். மேற்குறித்தவண்ணம் எழுத் தெண்ணி வகுக்கப்பெற்ற கட்டளையடிகளால் இயன்ற செய்யுளாதலின் இது கட்டளைக்கலித்துறை யென்னும் பெயர்த்தாயிற்று. பிற்காலத்தாரால் கட்டளைக்கலித் துறை யென்றபெயரால் வழங்கப்பெறும் இச்செய்யுள், தொல்காப்பியச் செய்யுளியலில் விரித்துரைக்கப்பட் டுள்ள பழைய யாப்பிலக்கணத்தின்படி ஐஞ்சீர் நான்கடியான் வந்த தரவு கொச்சகம் எனப்படும்.

‘இனி நூானவில் புலவர்” என்ற தனு ன், இதனேக் கோவையாக்கி எழுத்தெண்ணி அளவியற்படுத்துச் செய்வனவும் தரவு கொச்சகம். அவற்றுள் ஒரோ

வெழுத்து மிக்குவருவனவும் கொச்சகமாம்.