பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 413

திருப்பதிகங்களிற் குறிக்கப்பெறும் நூற்பெயர்களால் இனிது விளங்கும். அப்பரடிகள், இறைவன் பால் முறை யிட்டுத் தெரிவித்துக்கொள்ளுதற்குரிய செய்திகளா கவும், இறைவன் செய்த அருட்செயல்களாக உலகத் தார்க்கு அறிவுறுத்தவேண்டிய செய்திகளாகவும் அமைந்த திருத்தக வினவாகிய நிகழ்ச்சிகளைப் புலப் படுத்தும் நிலையில் அமைந்தன. இத் திருப்பதிகங்க ளாதலின், இவை திருவிருத்தம் என வழங்கப் பெற்றன. எலிவிருத்தம் என்ற நூற்பெயரை எலியின் தொழிற்பாட்டு' என ஆளுடைய பிள்ளே யார் விரித் துரைத்தலால் இங்கு எடுத்துக்காட் டிய விருத்தம் என்ற சொல்லுக்குப் பாவினத்தின் வகையாகப் பிற்காலத் தில் வழங்கும் விருத்தப்பா எனப் பெ. குள் கொள்ளாது ஒன்றன் விருத்தாந்தமாகிய தொழில் நிகழ்ச்சியை விளக்கும் பனுவல் எனப் .ெ பாருளு ைர ப்ப .ே த இயைபுடையதாதல் காணலாம். புறச்சமயத்த ரால் 4னந்துரை வகையால் இயற்றப்பெற்ற நரிவிருத்தம், கிளிவிருத்தம், எலிவிருத்தம் என்பன போன்று வாழ்க் கைக்குப் பெரும்பயன் தராத நிகழ்ச்சிகளே விரித்துரை யாது உலகத்தார்க்கு இருமையினும் பெரும்பயன் தரத் தக்க திருத்தகவினவாகிய அருள் நிகழ்ச்சிகளேயே விரித்துரைப்பன இத்திருப்பதிகங்களாதலின், நரி விருத்தம் முதலியபிறவற்றின் வேருகத் 'திரு” என்னும் சிறப்புடை அடைமொழியைப் பெற்றுத் திருவிருத்தம் எனப் போற்றப்பெறுவனவாயின. இவ்வாறே, உயர் வற வுயர்தலமுடைய இறைவல்ை மயர் வற மதி நலம் அருளப்பெற்ற ஆழ்வார்களுள் ஒருவராகிய நம்மாழ்வார், திருமாலாகிய பெருமானிடத்தே தாம் கொண்ட பேரன்பின் திறத்தால் தம் உள்ளத்தே விளைந்த அநுபவ நிகழ்ச்சியையும், தம் உள்ளத்தை நெகிழ்வித்த தன்னேரில்லாத் தலேவகிைய இறை

ી. છે – 89 - 5,