பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 4 15

திருவருளே நினேந்து போற்றிய சுண்ண வெண் சந்த னச்சாந்தும் என்ற திருப்பதிகமும், சமணர்கள் திருநாவுக்கரசரைக் கல்லுடன் பிணித்துச் கடலில் தள்ளியபோது அக்கல்லே தெப்பமாக மிதக்கும் படி பாடிய சொற்றுணே வேதியன்’ என்னும் நமச்சிவாயத் திருப்பதிகமும், கல்லே தெப்பமாகக் கடலிலிருந்து கரையேறிய நாவுக்கரசர், திருப்பாதிரிப்புலியூரை யடைந்து தோன் ருத்துணேயாயிருத்து தம்மை உய்வித் தருளிய பாதிரிப் புலியூர்ப் பெருமானே ப் பரவிப் போற் றிய ஈன்ருளுமாய்' என்னும் திருப்பதிகமும், அமண் சமயத் தொடக்குடைய உடம்போடு வாழ விரும்பாது அவ்வுடம்பினேத் தூய தாக்கும் வண்ணம் இறைவனது திரு வடையாளமாகிய இடபக்குறி, சூலக்குறி என்ப வற்றைப் பொறித்தருளும் வண்ணம் பெண்ணுகடத்துத் திருத்துங்கானே மாடத்து எழுந்தருளிய பெருமானே வேண்டிப் போற்றிய பொன் குர் திருவடிக்கு ஒன் றுண்டு விண்ணப்பம்’ என்னும் திருப்பதிகமும், தம்பாற் பேரன்புடைய அப்பூதியடிகள் திருமனே யில் அமுது செய்தருளப் புகும்பொழுது அவர் தம் புதல்வன் மூத்த திருநாவுக்கரசு அரவு தீண்டி யிறக்க அத்துன்ப நிகழ்ச்சியைப் பெற்ருேர்கள் மறைக் கவும், இறைவன் திருவருட் குறிப்பால் உணர்ந்து அவன் உயிர் பெற்றெழும் வண்ணம் பாடிய ஒன்று கொலாம் என்ற திருப்பதிகமும், ஆளும் நாயகன் கயிலே கண்டன்றி மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்’ என்னும் உறுதியுடன் கயிலே நோக்கிச் சென்ற திருநாவுக்கரசர், இடைவழியில் தவமுனிவராய்த் தோன் றித் தம்மைத் தடுத்து நிறுத்திய இறைவன் பணித்த வண்ணம் அங்குள்ள குளத்தில் மூழ்கித் திருவையாற்றில் வந்தெழுந்து, எவ்வுயிரும் சத்தியுஞ் சிவமுமாய்த் தோன்றிய தெய்வக் காட்சியைக் கண்டு

மகிழ்ந்து பாடிய மாதர்ப்பிறைக் கண்ணியானே’ என்ற