பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416

பன்னிரு திருமுறை வரலாறு


பதிகமும் நாலாந்திருமுறையிலுள்ள அற்புதத் திருப் பதிகங்களாகும். இத்திரு முறையில் நூற்றுப் பதின் மூன்று திருப்பதிகங்கள் உள்ளன.

'கூற்ருயினவாறு விலக்க கிவீர்” என இறைவனே நோக்கி முறையிடும் நிலையில் தொடங்கிய இந் நாலாந்: திருமுறை, காலன் அறிந்தான் அறிதற்கரியான் கழலடியே என்ற இனிய தொடருடன் நிறைவு பெற்றி ருத்தலே நோக்குங்கால் கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின், ஆற்றல் த லேப்பட்டவர்க்கு எனத் தெய்வப் புலவர் அறிவுறுத்திய தவப்பயணுகிய இறவாத இன்பப் பெருவாழ்வை நல்கும் திருவருட் சாதனமாவது இத்திருமுறை யென்னும் உண்மை குறிப்பாற் புலனுதல் காணலாம்.

  • அன்னம் பாலிக்குத் தில் இலச் சிற்றம்பலம் ” என வரும் கோயில் திருக்குறுந் தொகை முதலாக வேத நாயகன்' என்ற முதற் குறிப்புடைய ஆதிபுராணத் திருக்குறுந்தொகை யிருகவுள்ள நூறு திருப்பதிகங் களின் தொகுதி, ஐந்தாந் திருமுறையென வழங்கப் பெறுவதாகும். இத்திருமுறையிலுள்ள ப தி க ங் க ள் யாவும் குறுந்தொகை என்னும் ஒரே யாப்பில் அமைந்த திருப்பாடல்களால் இயன்றனவாதலின் யாப்பமைதி கருதி இவற்றை ஒரே திருமுறையாக நம் முன்னேர் முறைப்படுத்தியுள்ளார்கள். குறுந்தொகை யாப்பு என்பது, நாற்சீர் நாலடியாய் அடிதோறும் தேமா, புளிமா என்னும் மாச்சீர்களுள் ஒன்று முதத் சீராகவும், கருவிளம், கூவிளம் என்னும் விளச்சீர்களுள் ஒன்று நான் காஞ் சீராகவும், இடையிலுள்ள இரண்டு மூன் ருஞ் சீர்கள் பெரும்பாலும் விளச்சீர்களாகவும் சிறு பான்மை மாச்சீர்களாகவும் அமைய வரும் செய்யுள் விகற்பமாகும்.