பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 423

ஆழ்வார்கள் அருளிச்செயலாகிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் திருமங்கையாழ்வார் அருளிய திருப்பாடல்களுள் திருநெடுந் தாண்டகம், திருக்குறுந் தாண்டகம் என இரு வகைப் பனுவல்கள் இடம்பெற் றுள்ளன. இவற்றுள் திருநெடுந்தாண்டகம் என்பது திருநாவுக்கரசர் அருளிய திருத்தாண்டக யாப்பில் அமைந்த முப்பது திருப்பாடல்களேயுடையதாகும். நெடுந்தாண்டகம் என்பது நெடிய இயற்பாடலாகிய தாண்டகம் என விரியும். திவ்யப் பிரபந்தத்தில் நிதி யினேப் பவளத்து னே’ என்னும் முதற் குறிப்புடைய பாடல் முதலாக இருபது திருப்பாடல்களையுடைய பனுவல் திருக்குறுந்தாண்டகம் என்பதாகும். இது தாண்டகமாகிய பாவினைப் போன்று இருபதின் மேற் பட்ட எழுத்துக்களேயுடைய நெடிய அடிகளேப்பெருது, இருபதெழுத்திற்கு உட்பட்ட எழுத்துக்களால் இயன்ற அடிகளேயுடையதாய்த் தாண்டகம்போலச் சுத்தாங்க மாகப் பாடுதற்குரியதாய்த் தாண்டகப்பாவிற் குறுகி வரும் பாவில்ை இயன்றதாதலின் திருக்குறுந் தாண்டகம் என வழங்கப்பெறுவதாயிற்று. வேறு பட்ட செய்யுள் வகையாகிய இவ்விருதிறப் பாக்களேயும் தாண்டகம் என ஒரே யாப்பாகக் கொண்டு இலக் கணங் கூறுவர் பன்னிருபாட்டியலுடையார்

திருநாவுக்கரசர் அருளிய திருநேரிசைப் பதிகங் களும் திருமங்கையாழ்வார் அருளிய திருக்குறுந் தாண்டகமும் ஒரே யாப்பில் அமைந்தனவாகும். இருபதெழுத்துக்கு மேற்படாது இவ்வெல்லைக்குள்

1. "மூவிரண்டேனும் இரு நான்கேனும், சீர்வகை நாட்டிச் செய்யுளிடைவர், கடவுளர்ப் புகழ்வன தாண்டகம் அவற் துள், அறுசீர்குறியது நெடியது எண் சீராம்’

  • அறுசீ ரெண்சீர் அடிநான் கொத்தங், கிறுவது தாண்ட கம் இருமுச் சீரடி, குறியது நெடிய திருநாற்சீரே" பன்னிரு பாட்டியல்.