பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424

பன்னிரு திருமுறை வரலாறு


அடங்கிவரும் அடிகளேயுடைய இவை தாண்டகம் என்னும் யாப்பிற்குறுகி வேறுபட வந்த யாப்பின என்பதும், இருபதெழுத்தின் மேற்படவரும் அடிகளே யுடைய நெடிய இயற்பாடல்கள் திருநாவுக்கரசர் பாடிய திருத்தாண்டகமும் திருமங்கையாழ்வார் பாடிய திருநெடுந்தாண்டகமும் ஆதலின் அவையே தாண்ட கம் என்னும் யாப்பிற்குரியன என்பதும், தண்டகம் என்னும் வடமொழிச் செய்யுள் விகற்பத்தை அடி யொற்றிப் பிற்காலத்தாராற் பாடப்பெற்று யாப்பருங் கல விருத்தியுரையில் மேற்கோளாகக் காட்டப்பட்ட தாண் டகச் செய்யுட்களும் தேவாரத்திலும் திவ்யப் பிரபந்தத்திலும் அமைந்த திருத்தாண்டகம், திரு நெடுந்தாண்டகம் என்னும் திருப்பாடல்களும் தம்முள் வேருவன என்பதும் உளங்கொளத்தக்கனவாம்.

"பாதந்தோறும் நகணங்கள் இரண்டும் ரகணங்கள் ஏழு முடையது தாண்டகமாம். அஃதாவது தன்ன தன ன தான ைதான ைதானளு!! தா னனு தான-ை தானன என இருபத்தேழெழுத்தான் வரும் வடமொழித் தண்டகத்தின் இலக்கணத்தினே, வேங்கடமகி தமது சதுர் தண்டிப் பிரகாசிகையிற் கூறினர். அஃது இங்கு ஏற்புடையதல்ல” எனவும் இத்தாண்டகச் செய்யுள் தொல்காப்பியச் செய்யுளியலின்படி எண்சீரான் வந்த கொச்சக வொருபோகு எனப்படும்" எனவும் யாழ்நூ லா சிரியர் கூறிய விளக்கம் இங்கு நோக்கத் தக்கதாகும்.

ஆருந்திருமுறையாகிய இப்பகுதியில் அரியான அந்தணர் தஞ் சிந்தையானே' எனத் தொடங்கும் கோயில்-பெரிய திருத்தாண்ட கம் முதலாக, எண் ணு கேன் என்சொல்லி எண்ணுகேனே' எனத்தொடங்கும் திருப்புகலூர்த் திருத்தாண்டகம் ஈருகத் தொண்ணுாற் ருென்பது திருப்பதிகங்கள் தொகுக்கப்பெற்றுள்ளன.

TamilBOT (பேச்சு) --م--۔ مدسہ ---میمہ --مصمہء

2. யாழ்நூல்-பக். 220 3. யாழ் நூல்-பக் 219