பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 425

ஆண்ட அரசராகிய அப்பரடிகள் திருப்புகலூரிற் கைத் திருத்தொண்டுசெய்து தங்கியிருக்கும் காலத்துத் திருப் புகலூர்ப் பெருமான இறைஞ்சிப் புண்ணியா உன்ன டிக்கே போதுகின்றேன்’ என விண்மை ப்புஞ் செய்யும் முறையில் மண்முதலாம் உலகேத்த மன்னு திருத் தாண்ட கமாகிய எண்ணுகேன் என் சொல்லி எண்ணு கேனுே’ என்ற ಅp 5,555 ಮಿ.೬ ವಾಹಿ...! இத்திருப்பதிகத் தைப் பாடிப்போற்றி நண் ணரிய சிவானந்த ஞான வடிவேயாகி அண்ண லார் சேவடிக் கீழ் அமர்ந் திருந்தார் என்பது வரலாறு ஆதலின், அவ்வடிகளார் இறைவன் திருவடி நீழலை எய்தி இன்புறும் நிலையிற் பாடிய இத் திருப்பதிகம் அப்பர் பாடியருளிய நான்கு , ஐந்து, ஆருகிய மூன்று திருமுறைகளிலும் ஆருந்திரு முறையின் இறுதிக்கண் வைக்கப் பெறுவதாயிற்று. நான்கு ஐந்து ஆருகிய மூன்று திருமுறைகளிலும் முந் நூற்றுப் பன்னிரண்டு திருப்பதிகங்கள் உள்ளன. அவற்றின் மொத்தத் திருப்பாடல்கள் மூவாயிரத்து அறுபத்தாருகும். நான்காந் திருமுறையில் திரு நேரிசை” திருவிருத்தம் என்ற பகுதிகளிலும் ஐந்து ஆருந்திருமுறைகளிலும் கோயில் என வழங்கும் தில்லேக்குரிய திருப்பதிகங்கள் முதற்கண் அமைக்கப் பெற்றிருத்தல் காண லாம்.

இனி, ஏழாந்திருமுறை யென்பது, சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய திருப்பதிகங்கள் அனேத்தையும் கொண்ட ஒரு தொகுதியாகும். இத் திருமுறையில் பித்தாபிறை சூ டீ என்னும் திருப்பதிகம் முதலாகத் 'தானெனே முன் படைத்தான்’ என்னும் திருப் பதிகம் ஈருக நூறு திருப்பதிகங்கள் உள்ளன. இப்பதி கங்களிலுள்ள திருப்பாடல்களின் தொகை ஆயிரத்திரு. பத்தாருகும். இத்திருமுறையில் இந்தளம், தக்கரா நம் நட்டராகம், கொல்லி, கொல்லிக் கெளவானம், பழம் பஞ்சுரம், தக்கேசி, காந்தாரம், பியந்தைக் காந்தாரம்,