பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426

பன்னிரு திருமுறை வரலாறு


காந்தாரபஞ்சமம், நட்டபாடை, புறநீர்மை, சீகாமரம், குறிஞ்சி, செந்துருத்தி, கவுசிகம் பஞ்சமம் எனப் பதி னேழு பண்களுக்குரிய திருப்பதிகங்கள் முறையே தொகுக்கப்பெற்றுள் ளன.

நம்பியாரூரர்க்குத் திருமணம் நிகழவிருக்கும் நற்பொழுதிலே, யாவராலும் காண்டற்கரிய கடவு ளாகிய சிவபெருமான், உலகத்தார் காண முதியணுகத் தோன்றித் தனக்கு நம்பியாரூரர் வழிவழியடிமை எனக்கூறி, அற்புதப்பழ ஆவணம் ஒன்றைக்காட்டி, வெண்ணெய் நல்லூர்க்கு வா என அழைத்துப்போந்து அவ்வூர்ச் சபையினர் முன் வழக்குரைத்துவென்று, அங்குள்ளார் யாவரும் காணத் திருஅருட்டுறைத் திருக்கோயிலுட் புகுந்து மறைந்தருளினர். அப் பொழுது, இங்ங்னம் வலியவந்து தம்மைத் தடுத்தாட் கொண்டருளிய இறைவனது பெருங்கருணே திறத்தை நினேந்து நெஞ்சம் நெக்குருகிய வன் ருெண்டர், என் பெயர் பித்தனென்றே பாடுவாய்' என இறைவன் பணித்தருளியவண்ணம் முதன்முதற்பாடிப் போற்றிய செந்தமிழ்ப் பாமாலே பித்தா பிறைசூடி என்னும் திருப்பதிகமாதலின், அஃது இவ்வேழாந்திருமுறையின் முதற்கண் வைக்கப்பெறுவதாயிற்று. இத்திருப்பதிகத் திற்குரிய பண் இந்தளம் ஆதலின் இந்தளப் பண்ணில் அமைந்த பதிகங்கள் இதனைச் சாரவைக்கப்பெற்றன.

தம்பிரான் தோழராகிய சுந்தரர், பல தலங்களே யும் பணிந்து பண்ணர்ந்த செந்தமிழ்ப் பதிகங்களாற் ப ர ம ன ப் பாடிப்போற்றித் திருவஞ்சைக்களப் பெருமானே இறைஞ்சிப் போற்றும் நிலேயில், கயிலேப் பெருமான் ஆணையின் வண்ணம் தேவர் முனிவர் களுடன் அங்குவந்த வெள்ளேயானேயின் மீது அமர்ந்து திருக்கயிலாயத்திற்குச் சென்றர் என்பது வரலாறு. அப்பொழுது பாடிய திருப்பதிகம், 'தானெனே முன்