பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 437

பதிகம், வளவர்கோன் பாவையும் பாண்டிமாதேவியும் ஆகிய மங்கையர்க்கரசியாரது சிவபத்தி மாண்பினேயும் பாண்டியனுக்கு அமைச்சரும் சிவனடித் தொண்டரும் ஆகிய குலச்சிறையாரது திருத்தொண்டின் சிறப்பினே யும் புனைந்துரையின் றி இயல்பு வகையால் உள்ளவாறு புகழ்ந்து போற்றுவதாகும். எனவே இத்திருப்பதிகத் தினைச் செந்துறை மார்க்கத்துக்கு உரிய இசைப்பாடல் களுக்கு இலக்கியமாகக் கொள்ளலாம்.

வெண்டுறை என்பது, உள்ளதனே உயர்த்துக்கூறும் நோக்கத்துடன் இல்லதனையும் விரவிக் கூறும் புனைந் துரை வகையாகிய நாடகவழக்கின அடியொற்றி மக்க ளேப் புகழ்ந்துரைக்கும் இசைப்பாட்டாகும். ஆளுடையபிள்ளேயார் அருளிய தேவாரத்துள்,

ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கி நின்று: நேரிய நான் மறைப்பொருளே யுன்ரத் தொளிசேர்

நெறியளித்தோன் நின்ற கோயில் பாரிசையும் பண்டிதர்கள் பன்ளுைம் பயின்ருேதும் ஒசை

கேட்டு வேரிமலி பொழிற்கிள்ளே வேதங்கள் பொருட்சொல்லும்

மிழலேயாமே” என வரும் திருப்பாடல், திருவிழிமிலேயுள் வாழும் நான் மறையந்தணர்களின் வேதநூற்கல்வியை மிகுத்துக் கூறிப்போற்றும் நிலேயில், அவர்கள் இடைவிடாது வேதம் ஒதுதலைக் கேட்ட கிளிகளும் வேதத்திற்குப் பொருள் கூறின எனப் புனேந்துரைத்தமையால் இத் தகைய திருப்பாடல்களே வெண்டுறை மார்க்கம் பற்றிய இசைப்பாவுக்கு இலக்கியமாகக் கொள்ளலாம்.

தேவபாணி இரண்டாவன, தெய்வத்தைப் பரவிய இசைப் பாடல்களாகிய பெருந்தேவபாணி, சிறுதேவ பாணி என்பன. இவ்விருவகைத் தேவபாணிக்கும் சிலப் பதிகாரம் கடலாடு காதை உரையில் அடியார்க்கு நல்லார் மேற்கோளாகக்காட்டிய உதாரணச் செய்யுட்