பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436

பன்னிரு திருமுறை வரலாறு


தாற்றுவரி கானல் விரிமுரண் மண்டிலமாத் தோற்று மிசையிசைப்பாச் சுட்டு '

என்ருர் இசைநுணுக்கமுடைய சிகண்டியாரென்க.

இன்னும் சுத்தம், சாளகம், தமிழ் என்னும் சாதி யோசைகள் மூன்றினுடனும் கிரியைகளுடனும் பொருந் தும் இசைப்பாக்கள் ஒன்பதுவகை யென்ப; அவை:சிந்து, திரிபதை, சவலே, சமபாத விருத்தம், செந்துறை, வெண்டுறை, பெருந் தேவபாணி, சிறு தேவபாணி, வண்ணம் என இவை. চা সে স্টক ?

8 செப்பரிய சிந்து திரிபதை சீர்ச்சவலே தப்பொன்று மில்லாச் சமபாதம்-மெய்ப்படியுஞ் செந்துறை வெண் டுறை தேவபாணி வண்ண மென்ப பைந்தொடியாய் இன்னிசையின் பா’

என்ருர் பஞ்சமரபுடைய அறிவெைரன்னும் ஆசிரிய ரென் க” எனச் சிலப்பதிகாரம் கடலாடுகாதை உரை யில் அடியார்க்கு நல்லார் இசைப்பாவின் இயல்பினே யும் அதன் வகையினேயும் குறித்துள்ளார்.

இக்குறிப்புக்களேக் கூர்ந்து நோக்குங்கால், இயற் றமிழில் ஒத்தாழிசைக்கலியின் வகையாய்த் தெய்வத் தைப் பரவிய செய்யுள், இசைத்தமிழில் தேவபாணி என வழங்கப்பெறும் என்பதும், அஃது அடியளவும் இசையளவும் பற்றிப் பெருந் தேவபாணி, சிறு தேவ பாணி என இருவகைப்படும் என்பதும், தேவபாணி முதலிய இவ்விசைப்பாக்களே இசை நுணுக்கமுடையார் பத்துவகையாகவும் பஞ்ச மரபுடையார் ஒன்பதுவகை யாகவும் பகுத்துள்ளார்கள் என்பதும் நன்கு புலகுைம்.

செந்துறையாவது, உலகியல்வழக்குப்பற்றி மக்களே இயல்பு வகையாற் புகழும் நிலேயில் இயற்றப்பெற்ற இசைப்பட்டாகும். திருஞானசம்பந்தர் பாடியருளிய மங்கையர்க்கரசி என்ற முதற் குறிப்புடைய திருப்