பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 435

" தரவு என்ற பொருண்மை என்னே யெனின் முகத்துத் தரப்படுவது என்ப; அதனே எருத்து எனவுஞ் சொல்லுப.... இனி, இசைநூ லாரும் இத்தரவு முதலாயினவற்றை முகம் திலே, கொச்சகம் முரி என வேண்டுப, கூத்த நூலார் கொச்சகம் உள்வழி அதனே நிலேபெற அடக்கி, முகம், நிலே, முரி என மூன்ருக வேண்டுப. அவரும் இக் கருத்திற்கேற்ப முகத்திற் படும் தரவினே முகம் எனவும் இடை நிற்பனவற்றை இடைநிலை எனவும், இறுதிக்கண் முரிந்து மாறும் சுரிதகத்தினை முரி எனவும் கூறினர் ” என்பது பேரா சிரியர் தரும் விளக்கமாகும். இவ்விளக்கத்தினே அடி யொற்றித் தேவபாணியாகிய இசைப்பாட்டின் இயல்பு களாக அடியார்க்கு நல்லார் கூறும் குறிப்புக்கள் இங்கு நோக்கத்தக்கனவாகும்.

" அது (தேவபாணி) முத்தமிழ்க்கும் பொது, அஃது இயற்றமிழில் வருங்கால் கொச்சக வொருபோகாய் வரும். வரும்வழியும் பெருந்தேவபாணி சிறுதேவ பாணியென இருவகைத்தாய் வரும்...... அங்ங்னம் வரும் தரவின நிலேயென அடக்கி முகத் திற்படுந் தரவினே முக நிலே எனவும், இடை நிற்பனவற்றை இடை நிலே எனவும் இறுதியில் நிற்பனவற்றை முரி திலே என வும் பரவுதற் பொருண்மையாற் பெயர்கொடுத்தார் செய்யுளியலின் கண்ணும் எனக்கொள்க.

இனி, இசைத் தமிழில் வருங்கால் முக நிலே, கொச் சகம், முரி என்ப ஒருசா ராசிரியர். அன்றி இசைப்பா இசையளவுபா என்னும் இரு பகுதியுள் இஃது இசைப் பாவின் பகுதியென்ப. அது பத்து வகைப்படும் செந் துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவ பாணி, முத்தகம், பெருவண்ணம், ஆற்றுவரி, கானல் வரி, விரிமுரண், தலேபோகுமண்டி லம் என என்னே?

செந்துறை வெண்டுறை தேவபா கணிய்யிரண்டும் வந்தன முத்தகமே வண்ணமே - கந்தருவத்