பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 433

இருபது வகையாகப் பகுத்துரைப்பர். இசைத் தமிழ் நூலார் இப்பாக்களைப் பெருவண்ணம் இடைவண்ணம், வனப்பு வண்ணம் என மூன்ருகப் பகுத்துரைப்பர்.

'வண்ணம் ஒருவகையான் மூன்று வகைப்படும்: பெருவண்ணம், இடைவண்ணம், வனப்பு வண்ணம் என அவற்றுள் பெரு வண்ணம் ஆருய்வரும். இடை வண்ணம் இருபத்தொன் ருய் வரும். வனப்பு வண்ணம் நாற்பத்தொன் ருய் வரும்.” என அடியார்க்குநல்லார் கூறுதலால் இசை நூலார் கூறும் வண்ணம் மூன் ருதல் ஒருவாறு புலகுைம்.

“எண்ணியநூற் பெருவண்ணம் இடைவண்ணம் வனப்

பென்னும் வண்ண விசை வகையெல்லாம் மாதுரிய நாதத்தில் நண்ணிய பாணியும் இயலும் தூக்கு நடைமுதற்கதியிற் பண்ணமைய எழுமோசை எம்மருங்கும் பரப்பினர்’

(பெரிய - ஆயைர் - 28) என வரும் செய்யுளில் இம் மூவகை வண்ணங்களையும் சேக்கிழாரடிகள் முறையே குறிப்பிட்டுள்ளார்.

    • கண்ணுமூன் றுமுடை யாதிவாழ்கவிக் காழியுள்

அண்ணலந் தண்ணருள் பேணி ஞானசம்பந்தன் சொல் வண்ணமூன்றுந் தமிழிற்றெரிந்திசை பாடுவார் விண்ணுமண்ணும் விரிகின்ற தொல்புகழாளரே ’’

(2–75–11) எனவரும் ஆளுடைய பிள்ளையார் தேவாரத்துள், இசைத் தமிழ் நூலார் எண்ணி வகைப்படுத்திய வண்ணம் மூன்றென்று குறிக்கப்பெற்றிருத்தல் காண லாம். இங்கே குறிக்கப்பட்ட மூன்று வண்ணங்களின் இலக்கணங்கள் இவையெனத் தெளிவாகத் தெரிந்து கொண்டு அவற்றுக்குரிய தேவாரப் பாடல்கள் இவை யென எடுத்துக்காட்ட இயலவில்லே. எனினும் "வண்ணம் மூன்றுந் தமிழிற் றெரிந்திசை பாடுவார், விண்ணு மண்ணும் விரிகின்ற தொல்புகழாளரே என