பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440

பன்னிரு திருமுறை வரலாறு


ஆளுடைய பிள்ளேயார் தாம் பாடிய தேவாரத் திருப் பதிகங்களே இசையுடன் பாடும் முறை இதுவென அறிவுறுத்துதலால் அவர் பாடிய திருப்பதிகங்கள் இசைத்தமிழ் நூலார் எண்ணிய மூவகை வண்ணங் களுக்கும் நிலைக்களமாக அமைந்துள்ளமை நன்கு தெளியப்படும்.

இனி, நாடகத்தமிழில் சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம் என்னும் சொல்வகை நான்கினுள் மேற்குறித்த வண்ணமும் ஒன்ருக வைத்து எண்ணப் பட்டுள்ளது. "சொல்வகை நான்கு வகைப்படும்: சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம் என . சுண் ணம்-நான்கடியான் வருவது. சுரிதகம் - எட்டடியான் வருவது; வண்ணம் - நானுன் கடியான் வருவது. வரிதகம் - முப்பத்திரண்டடியான் வருவது. என்னே?

‘சுண்ணம் நான்கடி சுரிதகம் எட்டடி

வண்ணம் நானன்கு வரிதகம் எண்ணுன் கென் றெண்ணிய அடித்தொகை எய்தவும் பெறுமே?”

என்ரு ராகலின்” எனவரும் அடியார்க்கு நல்லார் உரை, பதினறடிகளால் இயன்ற இசைப்பாடலே வண்ணம் என்ற பெயரால் வழங்கக் காண்கிருேம்.

தாம் சொல்லக்கருதிய பொருளேக் கேட்போரது உள்ளம் விரும்பி ஏற்றுக்கொள்ளும்படி சுவைபெருக வண்ணித்துப் புகழும் நிலையில் இயற்றப்பெற்ற இசைப் பாடல்களே வண்ணம் என வழங்குதல் மிகவும் பொருத்தமுடையதே யாகும். கேட்போரைத் தம் வசமாக்கும் ஆற்றல் வாய்ந்த இசைப்பாடலாகிய வண்ணப்பாடலின் சிறப்பினே,

  • வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று

வலிசெய்து வளை கவர்ந்தார்’ (6-9-1)