பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 44f

என வரும் திருத்தாண்டகத் தொடரால் திருநாவுக் கரசர் அறிவுறுத்திய திறம் இங்கு நினைக்கத்தகுவ தாகும்.

முழுமுதற் கடவுளாகிய இறைவன், பிரிவிலா அடியார்களாகிய அன்பர்களுக்கு அருள் செய்யும் பொருட்டாக அவ்வப்பொழுது தன் திருவருளாற் படைத்துக்கொள்ளும் திருமேனிகளின் எழில் நலத் தையும் அத்திருக்கோலங்களுடன் நிகழ்த்திய ஆற்றல் மிக்க அருட்செயல்களையும் வனப்புற வண்ணித்துப் போற்றும் முறையில் அமைந்த தெய்வ இசைப்பாடல்களே வண்ணம் என்ற பெயரால் வழ்ங் குதல் தேவார ஆசிரியர்கள் காலத்திற்கு முற்பட்ட சொல் வழக்காகும். ' குழையணிந்த திருச்செவியினை யுடையீர், நும்மை இசைப்பாக்களாகிய வண்ணப் பாடல்களால் பாடிப்போற்றும் அடியார்களுக்கு அவர் கள் அழைப்பதன்முன்னமே எளிவந்து அருள்புரி வீராக ' என த் திருவோத்தூர்ப் பெருமான வேண்டிப் போற்றும் முறையில்,

  • குழையார் காதீர் கொடுமழு வாட்படை

உழையாள்வீர் திருவோத்துரர் பிழையா வண்ணங்கள் பாடிநின் ருடுவார் அழையாமே யருள் நல்குமே '.

என ஆளுடையபிள்ளையார் பாடிய திருப்பாடல், இறை வனப் போற்றும் இயல்பமைந்த வண்ணப்பாக்களின் சுவைநலத்தையும் பயனேயும் நன்கு வலியுறுத்தல் காணலாம்.

" இனி, வரிப்பாடலாவது :-பண்ணும் திறமும் செயலும் பாணியும் ஒரு நெறியின்றி மயங்கச் சொல் லப்பட்ட எட்டனியல்பும் ஆறனியல்பும் பெற்றுத் தன் முதலும் இறுதியும் கெட்டு, இயல்பும் முடமுமாக முடிந்து, கருதப்பட்ட சந்தியும் சார்த்தும் பெற்றும்