பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 453

கருத்திற் கொண்டு தான, தன, தான, த ைமுதலிய வற்றை வாய்பாடுகளாக வைத்து எழுத்தெண்ணி அடி வகுக்கு முகமாக அவற்றின் கட்டளைகளைப் பிரித்தறிதல் இயல்வதாகும்.

திருமுறை வகுத்த நம்பியாண்டார் நம்பி, திரு வெருக்கத்தம் புலியூரில் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபிற் பிறந்த இசைச் செல்வியாராகிய பாடினியார் ஒருவரைக் கொண்டு மூவர் தேவாரப் பதிகங்களுக்கும் இசையமைத்தார் என்பதும், அவ்வாறு அமைந்த இசைமுறையில் இன்ன இன்ன பண்களுக்குரிய பதிகங் கள் இத்தனை இத்தனை கட்டளைகளை யுடையன என் பதும் திருமுறை கண்ட புராணத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பெற்றுள்ளன. திருமுறை கண்ட புராணம் கூறும் முறையில் இன்ன இன்ன பண்களில் அமைந்த திருப்பதிகங்களின் கட்டளைகள் இத்துணைய என்பதனே விபுலாநந்த அடிகளார் தாம் இயற்றிய யாழ்நூலில் தேவார இயல்’ என்ற பகுதியில் விரிவாகப் பகுத்துக் காட்டியுள்ளார்கள். அந்நூலிற் கூறப்பட்ட பகுப்பு முறையினை அடியொற்றித் தேவாரத்தில் ஒவ்வொரு பண்களிலும் அமைந்த திருப்பதிகங்களின் கட்டளேப் பகுப்பினத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

முதலாந்திருமுறை

இனி, தேவாரத் திருமுறை எழனுள் முதல் மூன்று திருமுறைகளாக அமைந்த திருஞான சம்பந்தர் திருப் பதிகங்களின் கட்டளே வகைகளே முறையே காண் போம். முதற்றிருமுறையில் முதற் பண்ணுக அமைந்தது நைவளம் என்னும் நட்ட பாடையாகும். தோடுடைய செவியன்’ என்பது முதல் சிலேதன நடுவிடை என்பது ஈருக இருபத்திரண்டு திருப்பதிகங்கள் நட்டபாடைப் பண்ணிற் சேர்க்கப் பெற்றுள்ளன. இப்பதிகங்களில் அமைந்த கட்டளேகள் எட்டென்பது சொல் நட்ட