பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452

பன்னிரு திருமுறை வரலாறு


இங்ஙனம் எழுத்தெண்ணி வகுக்கப்பெற்ற ஜவகை யடிகளேயும் கட்டளையடிகள் என வழங்குதல் மரபு. ஒற்று நீக்கி எண்ணுங்கால் எல்லா அடிகளும் எழுத் தொத்துவரும் கலிப்பாவினைக் கட்டளைக் கலிப்பா என வும், நெடிலடி நான்கினல் எழுத்தொத்துவரும் கலித் துறையினேக் கட்டளேக் கலித்துறை எனவும், இவ்வாறே கட்டளேயாசிரியம் கட்டளே வஞ்சி எனவும் வழங்கும் பாவகைகள் எழுத்தள வாகிய கட்டளே யோசைபற்றிப் பிற்காலத்தார் பகுத்துரைத்தனவே யாகும்.

இயற்றமிழில் சீர்வ கைபற்றிச் செய்யுட்களின் அமைப்பினேப் பகுத்துணர்தல் எளிது. இசைத் தமிழில் ஒர் எழுத்து மிகினும் குறையினும் இசையமைப்புக்குரிய தாளம் முதலியன மாறுபடும். ஆதலால் நெடில் குறில் ஆகிய எழுத்தளவு பற்றி இசைப்பாக்களின் அமைப் பினேப் பகுத்துணர்தல் வேண்டும். இங்ங்னம் இசைப் பாக்களின் சந்த அமைப்பினே அறிதற்குரிய கருவி யாகத் தான, தன, தான, தன முதலாக உள்ள அசைச்சொற்கள் இசைத் தமிழ்ப் பாடல்களுக்குரிய சந்தக் குழிப்புச் சொற்களாக இசையாசிரியர்களால் எடுத்தாளப் பெற்றுள்ளன. முருகப் பெருமானது பொருள்சேர் புகழினச் சந்தமலிந்த செந்தமிழ்ப் பாடல்களாற் பரவிப் போற்றிய அருணகிரிநாதர், தாம் பாடிய திருப்புகழ்ப் பாடல்களின் இயலமைப்பினையும் இசையமைப்பினையும் பின்னுள்ளோர் எளிதின் உணர்ந்து பாடுதற்கு ஏற்ற வண்ணம் தான, தனு, தன ன முதலிய இசைக்குரிய அசைச் சொற்களேத் தம் பாடல்களில் ஆங்காங்கு இயைத்துப் பாடியுள்ளார். அவ் ஆசிரியர்க்கு இசை நெறி காட்டிய மூல இலக்கியங் கள் மூவர் முதலிகள் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத் திருப்பதிகங்களாகும். எனவே தேவாரப் பதிகங்களுக் குரிய யாப்பமைதியினையும் நெடில் குறில் என அமைந்த எழுத்துக்களின் மாத்திரையளவினைக்