பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 455

கட்டளை 7.

பிறையணி படர்சடை முடியிடை பெருகிய புனலுடை

யவனிறை,

தனதன தனதன தனத ைதனதன தனதன தனதன.

கட்டளை 8.

பிறையணிபடர் சடைமுடியிடை பெருகியபுன

லுடையவனிறை தானதனதன தனதனதன தனதனதன தனதனதன என நட்ட பாடைப் பதிகங்களுக்குக்குரிய எட்டுக் கட்டளேகளேயும் பகுத்தறியலாம்.

மேற்குறித்த வண்ணம் கட்டளையோசைகளைப் பகுத்துக் காணுமிடத்துத் தானன தானன என் புழி முன்னுள்ள தானன என்பதன் ஈற்றெழுத்து அடுத்த சீரினே அவாவித் தான தனு தன’ எனப்பிரிந்திசைத் தலும், தானன என்ப தன் முதலிலுள்ள நெடில் இரு குறிலாகித் தனதன’ என வருதலும், சில இடங்களில் குறில் விட்டிசைத்து நெடிலாத லும், இம்முறையே "தான தன ன ஆதலும் ,'தன ன தான ஆதலும், தானு' தனன. ஆதலும், தன ைதான ஆதலும், தானுதன’ என்ற சீரின் விகற்பங்களாய்த் தனகு தன, தனதந் தன, தானந்தன. தத்தந்தன, தத்தா தன, தந்தாதன என வருதலும் கட்டளையோசைக்கு ஏற்றவண்ணம் ஒத்த வாய்பாடுகளாகக் கொள்ளத்தக்கனவாம். நட்ட பாடைப்பதிகங்களில் வெளிப்படையாகத் தோன்றும் யாப்புவிகற்பங்கள் நான்காம். அவை முறையே 1-3, 4-8, 9-18, 19-22-ஆம் பதிகங்களின் யாப் பாகும். இவை ஒவ்வொன்றும் சீர்களின் எழுத்துக் கள் பிரிந்து இசைத்தலாகிய இசைத்திறத்தால் இரு வகையாகி எட்டுக்கட்டளைகளாயினவாறு காண்க.

இனி, இத்திருமுறையில் நட்டபாடையினேயடுத்து அமைந்த பண் தக்கராகம். இப்பண்ணில் 28-ஆம்