பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 465

  • தத்தத்தா என அமையும். ஆடரங்குகளில் மகளிர் பாடிக்கொண்டு நடித்தற்குப் பொருந்திய தாளச் சொற்கட்டுகளாக இப்பதிகம் அமைந்தமையால் இது "திருத்தாளச்சதி" என்னும் பெயர்த்தாயிற்று.

திரு ஏகபாதம் (127-ஆம்பதிகம்) ஏகம் - ஒன்று. பாதம் - அடி. ஏகபாதம் - ஒரடி. ஒரடியே பொருள் வேறுபட நான்கு முறை மடித்து வந்து ஒரு பாடலாக அமைதலின் ஏகபாதம் என்னும் பெயர்த்தாயிற்று.

பிரம புரத்துற்ை பெம்மா னெம்மயன்.

என்ற ஒரடியே நான்குமுறை மடித்துவந்து ஒரு பாட லாக அமைந்தமை காணலாம்.

ஏகபாதம் என்னும் சித்திரக விக்கு மூல இலக்கிய மாக விளங்கும் இத்திருப்பதிகத்துள் 1 முதல் 10 வரை யுள்ள பாடல்களும் 12-ஆம் பாடலும் நாற்சீரடிகளா லும், 11-ஆம் பாடல் ஐஞ்சீரடிகளாலும் இயன்று சீர்கள் வேறுபட்டு வருதலின் இதனை வியாழக்குறிஞ்சிக் குரிய கட்டளைகளுள் சேர்த்தெண்ணுது சித்திரகவி யென்னுஞ் சிறப்பு நோக்கித் தனிப்பட எண்ணுதல் முன்னேர் முறையாகும்,

திரு ஏழு கூற்றிருக்கை (128-ஆம் பதிகம்)

ஒன்று இரண்டு ஒன்று, ஒன்று இரண்டு மூன்று இரண்டு ஒன்று என இவ்வாறு ஒன்றுமுதல் ஏழு முடியப் படிப்படியாக ஒவ்வொன்று ஏற்றியும் இறக் கியும் இங்ங்ணம் ஏழு கூறுகளிலும் எண்கள் இருக்க இயற்றப்படுஞ் செய்யுள் எழுகூற் றிருக்கை எனப்படும். இதனைச் சித்திர கவிகளுள் ஒன்றெனப் போற்றுவர் பெரியோர். எழுகூற்றிருக்கையாவது ஏழறை யாக்கி முறையானே குறுமக்கள் முன்னின்றும் புத் போந்தும் விளையாடும் பெற்றியான் வழுவாமை