பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

பன்னிரு திருமுறை வரலாறு


இ ர ட் டை ய ர் அடைகொடுத்துச் சிறப்பித்தற்குரிய காரணத்தினே ஒரு சிறிது நோக்குவோமாக.

தேவாரம் என்னும் இத்தொடர்க்கு அறிஞர் பலரும் வேறுவேருகப் பொருள் கொண்டனர். இ த னே த் தேவ+ ஆரம் எனப்பிரித்து இறைவனுக்கு மாலேயாயது எனப் பொருள் கூறுவர் சிலர். தேவார ஆசிரியர் மூவரும் இறைவனுக்கு அணியும் பாமாலேகளாக அழகிய திருப்பதிகங்களைப் பாடிப் போற்றிய திறத்தை இன்ஞேர் தம் கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டுகின் றனர். தே + வாரம் எனப் பி ரி த் துத் தெய்வத்தி னிடத்து அன்பை விளேவிப்பது எனப் பொருள் கூறுவர் சிலர். வாரமாகித் திருவடிக்குப் பணிசெய் தொண் டர் பெறுவதென்னே ’ எ ன வ ரு ம் சுந்தரமூர்த்தி கவாமிகள் தேவாரத்தில் வாரம் என்னும் சொல் இறைவன்பால் மெய்யடியார்கள் வைத்த பேரன்பு என்னும் பொருளில் வழங்கப் பெறுதல் இவண் கருதற் குரியதாகும். கி. பி. 1821 முதல் 1839 வரை படை வீட்டு ராச்சியத்தை யாண்ட மல்லிநாத சம்புவராயன் காலத்துப் புலவர் பெருமக்களான இரட்டையர்களே ! மூவர் திருப்பதிகங்களேயும் தேவாரம் என்ற பெயரால் முதன் முதல் வழங்கியுள்ளார்கள். 11, 12 ஆம் நூற் ருண்டுகளில் வரையப்பெற்ற சோழவேந்தர் கல்வெட் டுக்களில் தேவாரம் என்ற சொல் வழிபாடு என்ற பொருளில் வழங்கப்பெற்றுள்ளது. மூவர் திருப்பதிகங் களும் இறை வழிபாட்டிற் பாடப் பெற்று வந்தமை பற்றிக் கி. பி. பதின்ைகாம் நூற்றண்டு முதல் அப் பதிகங்கள் தேவாரம் என்ற பெயரால் வழங்கப்பெற்று வருகின்றன வென்றும் அதற்குமுன் அப் பதிகங்கள் தேவாரம் என்ற பெயரால் வழங்கப்பட்டு வந்தன. வென்பதற்குக் கல்வெட்டுக்களிலோ அன்றி இலக் கியங்களிலோ சான்றுகள் கிடைக்கவில்லை யென்றும்

1. திரு. தி. வை. சதாசிவ பண்டாரத்தார் எழுதிய

தமிழிலக்கிய வரலாறு (13, 14, 15ஆம் நூற்றண்டுகள்) பக்கம் 65,