பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரம் என்னும் பெயர் வழக்கு 37

திருவாளர். தி. வை. சதாசிவ பண்டாரத்தாரவர்கள் ஆராய்ந்தெழுதிய தேவாரமென்னும் பெயர் வழக்கு ' என்ற தலைப்புடைய கட்டுரையில் தெளிவாக விளக்கி யுள்ளார்கள். அவர்கள் எடுத்துக்காட்டியபடி தேவாரம் என்ற பெயர் சோழர் கல்வெட்டுக்களில்தான் முதன் முதல் காணப்படுகின்றது. கி. பி. பதினெராம் நூற் ருண்டுக்கு முன் தேவாரம் என்ற சொல் வழிபாடு என்னும் பொருளில் வழங்கியதென்பதற்கு இலக்கியச் சான் ருே கல்வெட் டா தரவோ கிடைக்கவில்லே. எனவே தேவாரமென்ற சொல் சோழ மன்னராட்சிக் காலத்து வழிபாடென்னும் பொருளில் வழங்கப் பெறு தற்குரிய காரணம் யாது என ஆராய்தல் இன்றி யமையாததாகும்.

தே என்பது தெய்வம் என்னும் .ெ ப ரு ளே க் குறித்து வழங்கும் ஒரெழுத் தொருமொழி. வாரம் என்பது இசையின் கூறுபாட்டினேக் குறித்து வழங்குந் தமிழ்ச்சொல். வாரமாவது முதல் நடை, வாரம், கூடை, திரள் என்னும் இசை யியக்கம் நான்கினுள் ஒன்று. மந்த நடையுடையதாய்த் தாழ்ந்து செல்லும் இன் னிசையியக்கம் முதனடையெனப்படும். முடுகிச் செல் லும் விரைந்த நடையினேயுடைய இசையியக்கம் திரள் எனப்படும். இவ்விரண்டிற்கும் இடை நிகர்த்ததாய்ச் சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் பொருந்திய பாடல் வாரம் எனப்படும். சொற்செறிவும் இசைச் செறிவும் உடைய பாடல் கூடையெனப்படும். இவ் விசையியக்கம் நான்கின் இயல்பினேயும் சிலப்பதிகார வுரையில் அரும்பதவுரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் நன்கு விளக்கியுள்ளார்கள். இழுமென ஒழுகிய சொல் நடையும் செம்பாகமாகப் பொரு ளுணர்த்தும் பொருட்டெளிவும் வாய்க்கப்பெற்ற செய் யுளே வாரம் என்னும் இ ைச யி ய க் க ம் வாய்ந்த பாடலாகுமென்பது அடியார்க்கு நல்லார் முதலிய உரையாசிரியர்களின் கருத்தாகும். இயற் பாட்

1. செந்தமிழ் 45-ம் தொகுதி பக்கம் 121 - 128.