பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538

பன்னிரு திருமுறை வரலாறு


எட்டுத் திருப்பதிகங்களுள் ஒன்ருக அமைந்தது என் பதனே,

  • திருப்பெருகு பெருங்கோயில் சூழவலங்

கொண்டருளித் திரு முன் நின்றே அருட்பெருகு திருப்பதிகம் எட்டொருகட்

டனே யாக்கி அவற்றுள் ஒன்று விருப்புறுபொற் றிருத்தோணி வீற்றிருந்தார்

தமைப்பாட விர வு காதல் பொருத்தமுற அருன் பெற்றுப் போற்றியெடுத்

தருளினர் பூவார் கொன்றை '

(பெரியபுராணம்-சம்பந்தர் 107}

என்ற பாடலில் சேக்கிழாரடிகள் தெளிவாக விளக்கி யுள்ளார். திருஞ ன சம்பந்தர் அருளிய முதல் திரு முறையில் மடையில்வாளே (28) முதல் விதியாய் விளைவாய் (30) என்பது வரையுள்ள எட்டுத் திருப்பதி கங்களும் தக்க ராகத்திற்குரிய ஏழு கட்டளைகளுள் முதற் கட்டளையாக அமைந்தவை என்பதும், முதற் கட்டளே யுள் அடங்கிய எட்டுத் திருப்பதிகங்களுள் ஒன்றே ‘பூவார் கொன்றை என்னும் இப்பதிகம் என்பதும் யாழ் நூல் தேவார இயலுள் தொகுத்துரைக்கப்பெற்றன. இங்ங்ணம் சேக்கிழாரடிகள் தக்க ராகப் பண்ணுக்குரிய கட்டளைகளுள் ஒரு கட்டளேயுள் அடங்கிய திருப்பதிகம் எட்டெனவும் அவ்வெட்டினுள் ஒன்ருக அமைந்தது ‘பூவார்கொன்றை என்னும் திருப்பதிகம் எனவும் வரையறுத்துக் கூறுதலேக் கூர்ந்து நோக்குமிடத்து: அவ்வாசிரியர் காலத்திலேயே தேவாரப் பண்களுக் குரிய கட்டளைகளும் அவற்றுள் அடங்கிய திருப்பதி கங்கள் இத்தனே இத்தனே என்னும் வரையறையும் விளங்க அமைந்த தெளிவான கட்டளை அமைப்பு நிலேபெற்று வழங்கினமை நன்கு புலனும்.