பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 553

3. இசையமைதி

நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் நன்னுேக்கத் துடன் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியா ரூரர் ஆகிய மூவரும் எல்லாம்வல்ல இறைவனே இன் னிசையாற் பரவிப் போற்றிய செந்தமிழ்ப் பாடல்களே தேவாரம் என்பது முன்னர் விளக்கப்பெற்றது. தேவாரத் திருப்பதிகங்களைத் திருவாய் மலர்ந்தருளிய பெருமக்கள் மூவரும், கலைக்கெலாம் பொருளாய் விளங் கும் கண்ணுதற் கடவுள் திருவருளால் இயலிசைத் தமிழ்வளர்த்த அருளாசிரியர்களாவர். அவர்கள் இத் திருப்பதிகங்களைத் திருவாய் மலர்ந்தருளும் போதே இன்னிசையுடன் பாடிப் போற்றினர்கள். இச்செய்தி, அன்னுேர் அருளிய திருப்பதிகங்களாலும் அவர் தம் வரலாற்று நிகழ்ச்சிகளை விளக்கும் முறையில் நம்பி பாண்டார் நம்பி, சேக்கிழாரடிகள் முதலிய பெருமக்கள் கூறிய அரிய குறிப்புக்களாலும் இனிது விளங்கும்.

இசைப்பாடல்கள் இருவகைப்படும் : இயற் புல வன் பாடும் பொழுதே இசையுடன் பாடப்பெற்றன ஒருவகை புலவர்களால் முதற்கண் சுத்தாங்கமாகப் பாடப்பெற்றுப் பின்னர் இசைவல் லாரால் இசை யமைக்கப் பெற்றன மற்ருெருவகை. தேவார ஆசிரியர் மூவரும் அருளிய திருப்பதிகங்கள், அப்பெருமக்கள் திருவாயிலிருந்து வெளிவரும் பொழுதே பண்ணுர் இன் தமிழாய் வெளிப்பட்ட இன்னிசைப் பாடல்களாதலின் மேற்குறித்த இருவகையிசைப் பாடல்களுள் முதல் வகையில் அடங்கும் இப்பதிகங்களே ப் பண் சுமந்த பாடல் எனப் போற்றுவர் சான் ருேர் .

1. ' பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்

பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறை

யான் ’

திருவாசகம் - திருவம்மா &ன 8.