பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554

பன்னிரு திருமுறை வரலாறு


திருஞான சம்பந்தப் பிள்ளே யார், தாம்பாடிய திருப் பதிகங்கள் இனிய பண்ணமைந்த இசைத்தமிழ்ப் பாடல்கள் என்பதனே ஏழேயேழே நாலேமூன் றியலிசை யிசையியல்பா’ (1-126-11) எனவும், ‘ஏழின்னிசை மாலே (2-37-11) எனவும், பண் பொலி .ெ ச ந் த மி ழ் ம லே ' (2-48-11) எனவும், * சந்தமிவை தண்டமிழின் இ ன் னி ைச ெய ைப் பரவுபாடல் (3-76-11) எனவும் வரும் தொடர்களில் தெளிவாகக் குறித்துள்ளார். ஆளுடைய பிள்ளேயார் நாளும் இன்னிசையால் செந் தமிழ் வளர்த்த சிறப்பினே யும் அவர் மேற்கொண்ட இசைத்தமிழ்த் தொண்டு இனிது நிகழும் வண்ணம் இறைவன் திருக்கோலக் காவில் பிள்ளே யாருக்குப் பொற்ருளம் ஈந்தருளிய அருள் நிகழ்ச்சியினே யும் நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள்,

" நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்த னுக்குல கவர் முன் தாளம் ஈந்து அவன் பாடலுக் கிரங்கும்

தன்மையாளனே என்மனக் கருத்தை ஆளும் பூதங்கள் பாட நின்ருடும்

அங்கண ன்றன எண்கணம் இறைஞ் சுங் கோளிலிப் பெருங் கோயிலு ளானேக்

கோலக் காவினிற் கண்டுகொண்டேனே ?

(7–62-8)

என வரும் திருப்பாடலில் உளமுருகிப் போற்றியுள்ளார். தொண்டர் சீர் பரவுவாராகிய சேக்கிழாரடிகள், இன் னிசை யேழும் இசைந்த செழுந்தமிழ் ஈசற்கே, சொன் முறைபாடும் தொழும்பருள் பெற்ற தொடக்கினராய ஞானசம்பந்தப் பிள்ளேயாரைப் பண்ணியல் கதியே என வும், தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடை யார் சீர் தொடுக்குங், கானத்தின் எழுபிறப்பு எனவும் சிந்தை மகிழ்ந்து போற்றியுள்ளார். இக்குறிப்புக்களேக்