பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596

பன்னிரு திருமுறை வரலாறு


நன்கறிவர். இவ்வாறே பழந்தக்க ராகத்தை ஆரபியிற் பாடும் வழக்கமும் இருந்து வருகிறது.

மேலே இன்ன பண்ணுக்கு இன்ன ராகம் எனக் குறித்த முறையில் நவரோசு என்ற ஒரே இராகம் கொல்லி, கொல்லிக்கெளவானம், காந்தாரம், பியத் தைக் காந்தாம் என்ற நால்வேறு பண்களுக்கும் உரியதாக அமைக்கப் பெற்றிருத்தலேயும், பகற் பண் களுக்குரியனவாகக் கூறப்படும் இராகங்கள் சில மீட்டும் இராப்பண்களுக் குரியனவாகக் குறிக்கப் பெற்றிருத்தலேயும் கூர்ந்து நோக்குங்கால், இங்ங்னம் தேவாரப்பண்களுக்கு இராகம் வகுத்த காலத்தில் மேற்குறித்த நால்வேறு பண்களுக்கும் இடையே யமைந்த சிறப்பியல்பினேயுணர்ந்து பாடும் இசை ம) பு மறக்கப்பட்டு மறைந்தமை நன்கு புலம்ை. ஆகவே, மேற்குறித்த பண்களுக்குப் பிற்காலத்தில் அமைந்த இராக அட்டவனே யை அடிப்படையாகக் கொண்டு இன்ன பண்ணின் உருவம் இன்ன இராகத்தை ஒத்தது என முடிவு செய்வதைக் காட்டிலும், இன்ன இன்ன பண் ணமைந்த பதிகங்களே இன்ன இன்ன இராகங் களிற் பாடுதல் தக்கது என்று பி. ற் க | ல த் த ர் வகுத்த இசைமுறை யெனவே அதனைக் கொள்ளுதல் ஏற்புடையதாகும்.

வி தேவாரத்திற் பயின்ற பண்கள் முன்னேர் நூற்று மூன்று எனப் பகுத்த பழைய தமிழ்ப் பண்களுள் அடங் கியன என்பது முன் விளக்கப்பட்டது. இப்பண்களின் இலக்கணங்களே யுணர்ந்து பாடும் இசைமரபு, நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாறுபாட்டால் பிற்காலத்தில் அருகி மறைவதாயிற்று. இந்நிலையில் திருக்கோயில்களிலும் திருமடங்களிலும் திருப்பதிகங்கள் ஒகப்பெறும் முறை யினே அடியொற்றி ஒதுவார்கள் பாடிவந்தனர். எனி னும் பிற்காலத்தில் சைவ ஆதீனங்களிடையே நிலை