பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

598

பன்னிரு திருமுறை வரலாறு


காலேயில் மருதமும், மாலேயிற் செவ்வழியும், நள்ளிரவிற் குறிஞ்சியும் பாடுதல் வேண்டும் என்பது பழந்தமிழ் இசைமரபு. இம்மரபினே,

  • யாழோர் மருதம் பண்ண " மதுரைக் - 658 எனவும்,

' செவ் வழியாழிசை நிற்ப.......

மாலேயும் வந்தன்று ?? (கலி 143, 38-41) எனவும்,

  • ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி

பெருவரை மருங்கிற் குறிஞ்சியாட

மறம்புகல் மழகளி றுறங்கும் ” (அகம்-102) எனவும் வரும் சங்க இலக்கியத் தொடர்களால் நன் குணரலாம்.

  • பாலேயாழொடு செவ்வழி பண்கொள மன லே வானவர் வந்து வழிபடும் ” என்ருர் திருநாவுக்கரசரும். இதல்ை செவ்வழிப்பண் மாலேக் காலத்திற் பாடுதற்குச் சிறப்புரிமையுடைய தென்பது நன்கு புலனதல் காணலாம். தண்டியலங் காரத்தில் நுட்ப அணிக்கு உதாரணமாக அமைந்தது,

" பாடல் பயிலும் பணிமொழி தன்பணேத்தோள்

கூடல் அவாவாற் குறிப்புணர்த்தும்-ஆடவற்கு மென்றீந் தொடையாழின் மெல்லவே தைவந்தாள் இன்றிங் குறிஞ்சி யிசை " என்ற வெண்பாவாகும். இங்கே குறிஞ்சியிசையைப் பாடுதலாகிய தொழிலினலே இடையாமத்திலே கூடு தற்கு நேர்ந்தாள் என்பது அதுமானித்தறியப்படும். குறிஞ்சிக்குச் சிறுபொழுது இடையாமமென அறிக ” என்பது மேற்காட்டிய பாடலின் பழையவுரை. இவ் விசை மரபுக்கு ஏற்பத் திருவாவடுதுறை யாதீனத்தும், தருமபுர ஆதீனத்தும் ஆதீனத் தலைவரவர்கள் மார்கழி