பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

606

பன்னிரு திருமுறை வரலாறு


38. அந்தாளிக் குறிஞ்சி

குறிஞ்சிப் பெரும் பண்ணில் ைநவளம் என்ற திறத்தின் புறநிலையாய்ப் பண் வரிசையில் 38 என்னும் எண் பெற்றது அந்தாளி என்ற பண்ணுகும். இது குறிஞ்சிப் பெரும் பண்ணின் திறங்களுள் ஒன்றென் பது தோன்ற அந்தாளிக் குறிஞ்சி என வழங்கப் பெற்றது. மூன்ருந் திருமுறையில் 124, 125 - ஆம் பதிகங்கள் இப்பண்ணில் அமைந்தன. இதன் பழைய இசையுருவம் இதுவெனத் தெரிந்துகொள்ள இயல வில்லே. இப்பண் ணமைந்த பதிகங்களைச் சைல தேசாட்சி என்ற இராகத்திலும் சாமா இராகத் தி லும் பாடுதலே வழக்கமாகக் கொண்டனர் பிற்காலத்தார்.

41. காந்தாரம்

குறிஞ்சிப் பெரும்பண்ணின் அக நிலேயாய்ப் பண். வரிசையில் 41 என்னும் எண்பெற்று நி ன் ற து காந்தாரம். இப்பண் , இரண்டாந் திருமுறையில் 54 முதல் 82 வரையுள்ள பதிகங்களிலும், நான்காந் திருமுறையில் 2 முதல் 7 வரையுள்ள பதிகங்களிலும், ஏழாந் திருமுறையில் 71 முதல் 75 வ ைர யு ள் ள பதிகங்களிலும் அமைந்துளது.

" காந்தார பஞ்சமத்தின் பாஷாங்கராகமாகிய காந்தாரி என்பது, ஷட்ஜ மத்திமங்களால் அலங்கரிக் கப்பெற்றுத் தைவதம் இன்றிவரும் என்பர் சாரங்க தேவர். “காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாட' என ஆளுடைய பிள்ளையார் கூறுதலால், சாரங்க தேவர் கூறிய காந்தாரியே காந்தாரப்பண் எனக் கொள்ளுதல் பொருந்தும் எனவும், சங்கீத ரத்த கை ரத்தில் தேவார வர்த்த நீயாகிய கெளசி கத்தை யடுத்து இப்பண் கூறப்பட்டிருத்தல் இதனே வலியுறுத்தும் எனவும், செம்பாலேக்குரிய ரிகிம பதிந