பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/661

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

644

பன்னிரு திருமுறை வரலாறு


அமைந்த பன்னிரு தி ரு ப் .ெ ப ய ர் க ஆள யும் பரவிப் போற்றும் கருத்துடன் பன்னிரண்டு திருப்பாடல் களால் இயன்றுள்ளன. சைவ சமயத்தின் நுண் பொருள்களே அறிவுறுத்தும் முறையில் அமைந்த வாழ்க அந்தணர் என்னும் முதற் குறிப்புடைய திருப் பாசுரப் பதிகம் பன்னிரண்டு திருப்பாடல்களேயுடைய தாகும். திருவெழுகூற்றிருக்கை என்னும் மிறைக்கவி ஆசிரியப் பாவாக அமைந்த ஒரு திருப்பாட்ட்ாகும்.

நாளும் இன்னிசையால் நற்றமிழ்பரப்பும் திருத் தொண்டினை மேற்கொண்ட ஞானசம்பந்தப் பிள்ளே யார், தமிழ்மொழியில் விருந்தாய சொல் மாலேகள்’ சிலவற்றைத் திருவாய் மலர்ந்துள்ளார். இவ்வாறு பிள்ளையாரால் புது முறையில் முதன் முதல் அருளிச் செய்யப்பெற்ற அ த் தி ரு ப் ப தி க ங் க ள் தமிழில் அத்தகைய பனுவல்களுக்கெல்லாம் மூல இலக்கியங் களாகத் திகழ்கின்றன. அவற்றை மிறைக் கவி யென்றும் சித்திரகவி யென்றும் வழங்குவர். அவை யாவன: மொழி மாற்று, மாலேமாற்று, வழிமொழி, மடக்கு, இயமகம், ஏகபாதம், இருக்குக்குறள், எழு கூற்றிருக்கை, ஈரடி ஈரடிவைப்பு, நாலடி மேல் வைப்பு, முடுகியலாகிய திருவிராகம், சக்கர மாற்று, கோமூத் திரிகம் முதலியனவாகும். இவற்றை, "செந்தமிழ் மாலே விகற்பச் செய்யுட்களான் மொழி மாற்றும் வந்த சொற்சீர் மாலே மாற்றும் வழிமொழி எல்லா மடக்கும் சந்த இயமகம் ஏக பாதந் தமிழ் இருக்குக் குறள் சாத்தி எந்தைக் கெழு கூற்றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு’’

  • நீக்கரிய இன்பத்திராகம் இருக்குக்குறள்

நோக்கரிய பாசுரம் பல்பத்தோடும் ஆக்கரிய யாழ்முரி சக்கரமாற் றீரடி முக்காலும் பாழிமையாற் பாரகத்தோர் தாமுய்ய - ஊழி

உரைப்பமரும் பல்புகழால் ஒங்கவுமை கோனேத் திருப்பதிகம் பாட வல்ல சேயை'

(ஆளுடைய பிள்ளையார் திருவுலாமraல83-85-ம் கண்ணிகள்)