பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/699

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

682

பன்னிரு திருமுறை வரலாறு


செய்தாலன்றித் தமிழரது சமுதாய வாழ்வும் அரசியல் நிலையும் திருந்துதல் இயலாதெனவுணர்ந்து புறச் சமயத்தாரின் பொருந்தா நடைமுறைகளைத் திருப் பதிகந் தோறும் எடுத்துரைத்துக் கண்டிக்கும் கடமை யினே மேற்கொள்வாராயினர்.

ஆளுடைய பிள்ளையார், சமணர்களேச் சமணர்

அமணர், குண்டர், பிண்டியார் ஆரம்பர் என்ற பெயர் களாலும், புத்தர்களைச் சாக்கியர், தேரர், போதியார், சீவரத்தார் என்ற பெயர்களாலும் குறித்துள்ளார். சம்பந்தர் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த சமணர் க ளி ல் இல்லறத்தாராகிய சாவகநோன் பிகளும், துறவிகளாய் உடையின்றித்திரியும் அமணர்களும் இருந்தார்கள். அவர்களுள் துறவு நிலையினே மேற் கொண்ட அமணர்களாகிய அடிகள் மார்களே பெருந் தொகையின ராயிருந்தனர். பாண்டி யதா ட்டில் எண் பெருங்குன்றங்களிலும் வாழ்ந்த அடிகள் மார் எண்ணு யிரவரும் பாண்டியனது ஆதரவுபெற்று மதுரையில் ஆளுடைய பிள்ளே யாருடன் வாது செய்யக் குழுமி யெழுந்த செய்தி, அக்காலத்து அமணத்துறவிகளின் மிகுதியினேயும் அவர்களுக்கு அரசியலில் இருந்த செல் வாக்கையும் நன்கு புலப்படுத்தும்.

எவ்வுயிர்க்கும் அருளுடையராய் நடந்து கொள் ளுதலே சமண சமயத்தின் உயர்ந்த குறிக்கோளாகும். தரையில் நடக்கும் பொழுது எறும் பு முதலிய சிற்றுயிர் களுக்குச் சிறிதும் துன்பம் நேராதபடி மயிற்ருேகை யினல் தடவிக்கொண்டு வழியில் நடத்தலும், இரவில் விளக்கேற்றுதலால் விட்டில் முதலியன விழுந்து இறக்குமென்றஞ்சி இரவில் உண்ணுமையும், இருளில் தரையிற் படுத்துப் புரளுதலால் சிற்றுயிர்களுக்குண் டாகுந் துன்பத்தினை யெண் ணி உறியில் அமர்ந்து உறங்குதலும், நீர் வாழுயிர்கள் வருந்துமென நினைந்து