பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/711

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

694

பன்னிரு திருமுறை வரலாறு


குலேவாழை பொன் பவளம் பழுக்குங் கலிக்காழி ’

I2–58-1] என வரும் தொடரால் அறியலாம்.

சிவபெருமான் முனிவர்களுக்கு அறமுரைத்தற் பொருட்டு எழுந்தருளிய நிலையில் அப்பெருமானது திரு மேனியில் நிழல்தர அமைந்த ஆலமரத்தின் தோற்றத் தினைப் புலப்படுத்தத் திருவுளங்கொண்ட பிள்ளை யார், அம் மரம் நல்ல தளிர்களுடன் சிவந்த பழங்களைப் பெற்றுத் திகழும் காட்சியின,

  • கோலமாய்க் கொழுந்தீன்று பவளந் திரண்டதோர்

ஆலநீழ லுள்ளானும் ” [2–6–10] என்ற தொடரில் அழகுற விளக்குகின் ருர்.

மருத நிலத்தில் செந்தாமரை மலர்மேல் இளமை பொருந்திய அன்னம், பெருமித நிலேயில் வீற்றிருக்கும் அழகிய தோற்றத்தை விளக்குவது,

' செறியிதழ்த் தாமரைத் தவிசில் திகழ்ந்தோங்கும்

இலேக்குடைக் கீழ்ச் செய்யார் செந்நெல் வெறி கதிர்ச் சாமரை யிரட்ட இள அன்னம்

வீற்றிருக்கும் மிழலையாமே ?? [7–132-2} என வரும் தொடராகும். இதன் கண் அன்னத்தினே அரச தோற்றத்துடன் ஒப்பிடும் வண்ணம் புனே ந் துரைத்த திறம் அறிந்து இன் புறத்தக்கதாகும்.

மணியால் அ ைம த் த இடத்தினைப்போன்று தெளிந்த புனல் நிறைந்த பொய்கையில், தூய வெண் சங்கின் தொகுதிகள் சூழ்ந்து தோன்ற, அவற்றின் நடுவே மலர்ந்த செந்தாமரை மலர்மேல் அப்பொய் கைக் கரையில் வளர்ந்த புன்னேயின் மலர்கள் உதிரும் தோற்றத்தினேக் கூர்ந்து நோக்கிய ஆளு டைய பிள்ளை யார், அவ்வழகிய காட்சியினே அடிப்படை யாகக்கொண்டு, தூய பெருங் குடும்பத்தில் மறை