பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/712

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் వీ

முறைப்படி நிகழும் திருமணக் காட்சியினே அறிவுறு த் துவதாக அமைந்தது,

" தகவுடை நீர் மணித்தலத்துச் சங்குளவர்க்கம்

திகழச் சலசத்தீயுள் மிகவுடைய புன் குமலர்ப் பொரியட்ட

மணஞ் செய்யும் மிழலையாமே '’ [1-132 6 என வரும் திருப்பாடலாகும். இவ்வாறு ஞான சம்பந்தர் தேவாரத்தில் அமைந்த இயற்கையின் எழில் நலத்தை எடுத்துக் காட்டப்புகின் மிகவும் விரியும் என்றஞ்சி, ஒரு சிலவே இங்குக் குறிக்கப்பெற்றன:

பிள்ளேயார் அருளிய திருப்பதிகங்களில் ஒரு தலத் திற்கெனவன்றி எல்லாத் தலங்களுக்கும் பொதுவாக அமைந்த பதிகங்கள் ஏழாகும். அவையாவன, திருநீலகண்டப் பதிகம், ஷேத்திரக்கோவை, கோளறு திருப்பதிகம், பஞ்சாக்கரத் திருப்பதிகம், தனித் திரு விருக்குக் குறள், நமச்சிவாயத் திருப்பதிகம், திருப்பா சுரம் என்பனவாகும்.

ஞானசம்பந்தர், சிவபெருமானுடைய திருவரு ளுக்கு உரிமையுடைய தெய்வங்களாக விநாயகப் பெருமானேயும் முருகப்பெருமானேயும் தாம் பாடிய திருப்பதிகங்களிற் குறித்துப் போற்றியுள்ளார். தம் காலத்தில் வாழ்ந்த சிவனடியார்களாகிய குலச் சிறை யார், சிறுத்தொண்டர், நமிநந்தியடிகள், திருநீல கண்ட யாழ்ப்பாணர், நீல நக்கர், மங்கையர்க்கரசியார், முருக நாயனர் என்னும் பெருமக்களேயும், தம் காலத் திற்கு முன் நிலவிய சிவனடியார்களாகிய சண்டேசர் கண்ணப்பர், கோச்செங்கட் சோழர், புகழ்த்துணே யார் என்னும் பெருமக்களை யும், சிவபெருமான வழிபட்டு அருள் பெற்றவர்களாக மார்க்கண்டர், பகீரத ன் புரூரவா, இராமபிரான், இலக்குவன், சடாயு, சம்பாதி, சாம்புவான், சுக்கிரீவன், வாலி, அதுமான், நளன்