பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/728

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 7 : ;

இன்றியமையாமையினையும் விரித்துரைக்கும் சமண சமயத்திற் சார்ந்திருந்த தருமசேனர்க்கு, அறங்களேக் கடைபோகச் செய்து நிறைவேற்றுதற்கு மூலமாய் மக்களுக்கு உறுதுணையாய் விளங்குவது இறைவனது திருவருளே என்னும் மெய்ம்மையினே அறிவுறுத்தி உய்யக்கொள்ளும் முறையில், சைவ சமயத்திற் சேர்த்துத் தயாமூலதன்மம் என்னும் அருளற நெறி யினே அறிவுறுத்தித் திருநாவுக்க ரசாக்கிய இறைவனது திருவருட் செயல் இனிது புலனுதல் காணலாம்.

அறவாழியந் தண்ணுகிய இறைவன், உலகில் பிறரது வறுமைத் துயர்கண்டு பொருது தம்பாலுள்ள பொருள்களே இரப்போர்க்கு இல்லே யென்னது ஈந்து மகிழும் அருளுடைச் செல்வர்களுக்கென்றே சென் றடையாத திரு'வாகிய தன் திருவருட் செல்வத்தை உரிமை செய்து வைத்துள்ளான் என்றும், அப்பெருமா னது திருக்குறிப்பை உணர்ந்து தம்பாலுள்ள பொருள் களே இரவலர்க்கு ஈந்து மகிழும் ஈகைத் திறத்தினை மேற்கொள்ளாது த ேம யுண்ணவேண்டுமென் றெண்ணிக் காவில்ை வைத்திழக்கும் வன்கண்ண ராகிய உலேசபிகட்கென்றே கொடிய துன்பங்களைத் தரும் நரகங்களே இறைவன் ஒதுக்கிவைத்துள்ளான் என்றும் அப்பரடிகள் உலக மக்களுக்கு அறிவுறுத்துவ தாக அமைந்தது,

இரப்பவர்க் கீயவைத்தார் ஈபவர்க்கருளும் வைத்தார் காப்பவர் தங்கட்கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார் பரப்புநீர்க் கங்கை தன்சீனப் படர்சடைப் பாகம்வைத்தார் அரக்கனுக் கருளும் வைத்தார் ஐயன் ஐயாறஞரே”

(4-38–10) எ ன வ ரு ம் திருநேரிசையாகும். இத்திருப்பாடல், செல்வம், நல்குரவு என்னும் மேடு பள்ளங்களிற் சிக்கிக் கணிப்பும் கவற்சியும் கொண்டு தம்முனர்