பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறை வழிபாடு 57

சேரமான் பெருமாள் நாயனர் திருவஞ்சைக் களத்தில் எழுந்தருளிய இறைவனே த் திருமஞ்சனமாட்டித் திரு மாலே முதலியன தொடுத்தணிந்து வழிபடும்போது இறைவனே ஒரு நெறிய மனம் வைத்து உணர்ந்து போற்றுதற்குச் சாதனமாக முன்னுள்ள திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் முதலிய அருளாசிரியர் பாடிய திருப்பாட்டுக்களே உளங்க சிந்து ஓதி வழிபட்ட செய்தியும் இராசராச சோழன், கங்கை கொண்ட சோழன் முதலிய தமிழ்ப் பெருவேந்தர்கள் தேவாரம் திருவிசைப்பா முதலிய திருமுறைகளே ஓதி இன்றைவனே நாடோறும் வழிபட்டு ஆட்சிபுரிந்த வரலாறும், சீகாழி திருவீழிமிழலை முதலிய திருக்கோயில்களில் இத் திரு முறை நூல்களே எழுந்தருளிவித்து இவற்றை இறைவ கைவே கருதி வழிபடுதற்கேற்ற திருக்கைக்கோட்டி மண்டபம் அமைக்கப்பட்டிருந்தன எனக் கல்வெட்டுக் களிற் காணப்படும் வரலாற்றுக் குறிப்பும் தில்லேயில் திருத்தொண்டர் புராணமெழுதிய முறையை மறை யோர் சிவமூல மந்திரத்தால் அருச்சனே செய்து’ இறைஞ்சிஞர்கள் எனத் திருமுறை கண்ட புராணம் கூறும் குறிப்பும் பண்டைநாளில் இத்திருமுறைகளே நம் முன்னுேர் சிவத்துவம் வெளிப்பட்டுத் திகழும் சிறந்த அருள் நூல்களாகக்கொண்டு வழிபட்ட வுண்மையினே இனிது விளக்குவனவாகும். எனவே சிவபூசையின் ஒரு சிறந்த அங்கமாகவே இத்திருமுறை வழிபாடு முன்னுள்ள பெருமக்கள்ால் மேற்கொள்ளப் பட்டு வந்ததென்று தெரிகிறது.

சிவபூசை, அடியார் பூசை, குருபூசை ஆகிய வழி பாடுகளுக்கு எத்துனே ப் பயன் உண்டோ அத்துனே ப் பயன் இத்திருமுறை வழிபாட்டிற்கும் பாராயணத்துக் கும் உண்டென்பர் பெரியோர். சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப் பல படிகளாக வகுத்துச் செய்யப்படும் சிவவழிபாட்டினத் தவிர உயிர்கள் உய்திபெறுதற்கு வேறு சாதனமில்லையென்பது சைவ

4. கழற்றறிவார் நாயனர் புராணம் 9-ஆம் செய்யுள்