பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

பன்னிரு திருமுறை வரலாறு


நூற் றுணிபு. இறைவனது திருவருளாகிய சிவஞான மொன்றினுல்தான் அப்பெருமானே உள் ள வ று உணர்ந்து வழிபடுதல்கூடும். இறைவன் அருளிய திருவருள் ஞானத்தால் அம் முதல்வனே வழிபடும் பதிகப்பெருவழியினே அமைத்துத் தந்த திருவருட் செல்வர்கள் காரைக்காலம்மையார், திருஞான சம்பந்தப்பிள்ளேயார், திருநாவுக்கர சர், சுந்தரர் , திருவாதவூரடிகள் முதலிய திருமுறையாசிரியர்க ளாவர். சிவஞானிகளாகிய அப்பெருமக்களனைவரும் பொறிவாயில் ஐந்தவித்தாளுகிய இறைவன் அறி வுறுத்த பொய் தீர் ஒழுக்கநெறி நின்ற செம்புலச் செல்வர்களாதலின், அவர்கள் திருவாய்மலர்ந்தருளிய திருமுறைகள் யாவும் உயர்ந்த ஞான நூல்களாகத் திகழ்வனவாம். இத்தகைய சைவத் திருமுறைகள் பன்னிரண்டினேயும் முறைப்படி காதலாகிக் கசிந்து கண் ணிர் மல்கி ஒதுதலும், பிறரை ஒதும்படி செய்த லும், பிறர் சொல்லத் தாம் கேட்டலும், பிறரைக் கேட் கும்படி தூண்டுதலும், ஞான நூல்களாகிய இவற்றின் பொருள் நலங்களே இடைவிடாது சிந்தித்தலும் என ஐந்து வகையாலும் பயின்று வழிபடுதல் வேண்டு மென் பர் பெரியோர். "ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு, ஞானத்தாய் உனே நானுந் தொழு வனே' என்றவாறு சிவஞானம் பெற்ற பெரியோர்கள் அருளிய இத் திருமுறைகளைச் சாதனமாகக்கொண்டு எல்லாம் வல்ல இறைவனே வழிபட்டுப் போற்றும் முறை ஞானபூசையென நூல்களாற் பாராட்டப் படுகின்றது.

"ஞானநூல்தனே யோதல் ; ஒதுவித்தல்,

நற்பொருளேக் கேட்பித்தல், தான்கேட்டல், நன்ரு

ஈனமிலாப் பொருளதனேச் சிந்தித்தல் ஐந்தும்

இறைவனடி அடைவிக்கும் எழில்ஞானபூசை ”

என அருணந்திசிவாசாரிய சுவாமிகள் கூறும் பொரு ளுரை இவ்வுண்மையை வலியுறுத்தல் காணலாம்.