பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறை வழிபாடு $g

நிறைமொழி மாந்தராகிய அருளாசிரியர்களால் திருவாய் மலர்ந்தருளப்பெற்ற இத்திருமுறைகள், நன்மை பெருகவும் தீமை நீங்கவும் வேண்டிய மறை மொழிகளாகிய தமிழ் மந்திரங்களென்பது அப்பெரு மக்களது வரலாற்றினுல் இனிது விளங்கும். மந்திரம் என்பது தன்னேப் பயில்வா ரைப் போற்றிக் காப்பது என்னும் பொருளுடையதென்பர். தமிழ் மந்திரங்க ளாகிய இத் திருமுறைகளே அன்பினல் ஒதியுணரும் இயல்புடையோர், இவ்வுலக வாழ்க்கையில் நேரும் எல்லாத் தீங்கினேயும் நீங்கி எல்லா நலங்களையும் பெற்று இன்புறுவர். "இம்மையே தருஞ் சோறுங்கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமாம், அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லேயே” என்றவாறு இத்திருமுறைகளே யோதி வழிபடும் இயல்புடையோர் இருமைப் பயன்களேயும் ஒருங்குபெற்று மகிழ்வார்க ளென்பது திண்ணம்.