பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/781

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

764

பன்னிரு திருமுறை வரலாறு


கொத்துக்களையுடைய கொன்றைமரம் பொன் போன்ற பூக்களைச் சொரிந்து நிற்கும் இயல்பினே,

முறியினர்க் கொன்றை நன்பொன் கால’ [74]

எனவரும் முல்லேப்பாட்டு அடியால் அறியலாம்.

  • விரைசேர் பொன் இதழி தர மென்காந்தள்

கையேற்கும் ” {1–32-4)

என்ருர் ஞான சம்பந்தர்.

  • திரிமருப்பிரலேயொடு மடமான் உகள ? [99]

என்பது முல்லேப்பாட்டு.

கானமரும் பிணே புல்கிக் கலேபயிலும் ”

என்பது ஞானசம்பந்தர் தேவாரம்.

  • தென்னவற்பெயரிய துன்னருந்துப்பின்

தொன்முது கடவுள்' [40, 4 ; ;

என வரும் மதுரைக்காஞ்சியில், இராவணன் தென்ன வன்’ என்ற பெயரால் குறிக்கப்பெற்றுள்ளான்.

  • தென்னவன் மலேயெடுக்கச் சேயிழை நடுங்கக்கண்டு மன்னவன் விரலால் ஊன்ற மணிமுடிதெரிய வாயால் கன்னலின் கீதம்பாடக் கேட்டவர் காஞ்சிதன்னுள் இன்னலற்கு அருளிச்செய்தார் இலங்குமேற்றளிய

குரே '

என வரும் திருநேரிசை மேலே காட்டிய தொடரிற் குறிக்கப்படும் நிகழ்ச்சியை விரித்துரைப்பதாகும்.

உயர்ந்த பல கற்படைகளே உடைய மதிலே,

விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசை [352]

எனக் குறித்தார் மாங்குடி மருதஞர்,