பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/804

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திரு முறையும் 787

வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க் கியாண்டும் இடும்பையில

என்ருர் திருவள்ளுவர். வேண்டுதல் வேண்டாமை யிலான் என்னும் இத்தொடரை,

வேண்டாமை வேண்டுவது மில்லான்தன்னே

(6–46–9)

என அப்பரடிகள் தாம் பாடிய திருத்தாண்டகத்திற் பொன்னேபோற் போற்றிவைத்துள்ளார்.

இறைவனது பொருள் சேர்ந்தபுகழை விரும்பி ஞர்க்கு, அகவிருளாகிய ஆணவத்தைப்பற்றிவரும் நல் வினே தீவினே என்னும் இரு வினேகளும் உளவா தா என்பது,

இருள் சேர் இருவினையுஞ் சேரா, இறைவன்

பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

என்ற குறளிற் கூறப்பட்டது. இதன் கண் இருள் என்றது மயக்கத்தை எனவும், பொருள் என்றது மெய்ம்மையை எனவும் கொண்டு, மயக்கத்தைப் பற்றிவரும் நல்வினை தீவினேயென்னும் இரண்டுவின யும் உளவாகா இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பிரிைடத்து எனப் பரிமேலழகர் பொருள் வரைந்துள்ளார். " இன்ன தன்மைத்தென ஒருவராலுங் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள் : என்றும், நல்வினையும் பிறத்தற் கேதுவாகலான் இரு வினேயுஞ் சேரா என்றும் கூறினர். இறைமைக் குணங்கள் இலராயினரை உடையர் எனக்கருதி அறி லார் கூறுகின்ற புகழ்கள் பொருள்சேரா ஆகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ்: எ ன ப் பட் ட து, புரிதல்-எப்பொழுதுஞ் சொல்லுதல்’ என்பது மேற்காட்டிய குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய விளக்கவுரையாகும்.