பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/810

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

792

பன்னிரு திருமுறை வரலாறு


வனேக் குறித்தது, இறைவன் தனக்கு ஐம்பொறி வாயிலாக நிகழும் ஐம்புல அவாக்கள் இருந்து அவற்றைத் தன் ஞானத்தால் அடக்கி வென்ருன் என்ற கருத்திலன் ரூம். ஞானமே திருமேனியாக வுடையவன் என்பது வால் ரீவன் எ ன் னு ந் தொடரால் உணர்த்தப்பட்டது. ஐம்புல ஆசைகளால் உந்தப்பட்டு எத்தகைய பொருள்களையும் விரும்பு தலும் வெறுத்தலும் இறைவனுக்கில்லே யென்பது * வேண்டுதல் வேண்டாமை யிலான் ன். தனுல் முன்னமே வலியுறுத்தப்பட்டது. எனவே ஐம்பொறி வாயிலாகச் செல்லும் ஐயுணர்வு இறைவனுக்கு இல்லாமையும், அவையில்லே யாகவே அவற்ற்ை யடக்குதல் வேண்டா மையும் நன்கு விளங்கும். விருப்ப வெறுப்புடைய உயிர்கள் ஐயுணர்வுகள ன் மயங்கி அவற்றை யடக்க மாட்டாது அல்லற்படுத் துன்ப நிலேயிலே அருளாள னுகிய இறைவன், பொறிவா யில் ஐந்தினையும் அடக்கியாளும் பொய் தீரொழுக்க நெறி யினே மக்களுக்கு அறிவுறுத்தி நலஞ்செய்கின்றன் என்பதும் இயல்பாகவே பாசங்களின் நீங்கிய இறைவனு லன்றி ஏனேப் புலனுணர்வின ராய மாந்தர்களால் எடுத்துரைக்கப்பெறும் அ ற வு ைர க ள் குன்றிய அறவுரைகளாமன்றி, உலகவுயிர்கள் எல்லாவற்றுக் கும் மன நிறைவளிக்கும் மெய்ம்மை வாய்ந்த ஒழுக்க நெறியாக அமைதல் இயலாதென்பதும் இத் திருக்குற ளால் விளங்கும் அரிய வுண்மைகளாம்.

" அஞ்சொண் புலனு மவை செற்ற மஞ்சன் (1-38-41 அஞ்சுபுலன்களே விலங்கினே புறம்பயம் அமர்ந்தோய் ’’ s2–30–8] * ஐந்து புலனெடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த

புண்ணியத் {i,பக்.2.4) * அன்றிய அமணர்கள் சாக்கியர்கள்

குன்றிய அறவுறை கூரு வண்ணம் வென்றவன் புலனேந்தும் ” £1-113-10]