பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/821

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 803

என நெல்வாயில் அரத்துறைப் பெருமனே நோக்கி நம்பியாரூரர் முறையிடும் திருப்பாடலால் நன்கு விளங்கும்.

தாம் கூறக்கருதிய அறங்களுக்கெல்லாம் நிலேக்

களமாய்த் திகழும் முழுமுதற் கடவுளே முதற்கண் வாழ்த்தி வணங்குதல் இன்றியமையாதென அறிவுறுத் திய திருவள்ளுவர், உயிர்களாற் காணப்படாது அரு வாய்த் தத்துவங் கடந்து நிற்குந் தனிமுதற் பொரு ளின் அருளுருவாக விளங்கிக் கைம்மாறு கருதாது உலகிற்குப் பயன் சுரக்கும் வானத்தின் சிறப்பினே உணர்த்தும் பகுதி வான் சிறப்பு என்னும் இரண் டாம் அதிகாரமாகும். மழை, இறைவன் திருவருளின் விாேவாகத் திகழுந் திறத்தை,

மன் குனவன் உலகிற்கொரு மழையானவன் (1-1-6)

என ஞானசம்பந்தரும்,

  • சொரிவிப்பாக் மழை (5-16-3) என நாவுக்கரசரும்,

கார் க் குன்ற மழையாய்ப் பொழிவானே ? (7–59-3) எனச் சுந்தரரும் இனிது விளக்கியுள்ளார்கள்.

மழை இடையருது நிற்ப உலகம் நிலேபெற்று வரு

தலால் அம்மமைதான் உலகத்திற்கு அமிழ்தம் என்றும், நல்ல உணவுகளே உண்டாக்கி அவற்றை நுகர்கின் ருர்க்குத் தானும் உணவாய்ப் பயன்படுவது மழைநீர் என்றும் திருவள்ளுவர் அறிவுறுத்தியுள்ளார். அடிய சர் களின் ஐயம் நீங்க இக் கருத்தினை இறைவனே அறி வுறுத்தியுள்ளான் என்றதொரு குறிப்பினை,

  • தூய நீரமுதாய வாறது சொல்லுகென்றுமைக் கேட்கச்

சொல்லினிர் (7-88-9)

என வரும் திருப்பாடலில் நம்பியாரூரர் குறித்துள்ளமை இங்கு நோக்கத் தக்கதாகும்.