பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/870

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

852

பன்னிரு திருமுறை வரலாறு


சரியையாவது, ஆகமங்களில் விதித்தவாறு திருக் கோயிலில் அமைந்துள்ள இறைவனது உருவத் திரு மேனியைப் பொருள் என்று உணர்ந்து திருக்கோயி லில் அலகிடல், மெழுகல், பூக்கொய்து நறுமலர் மாலே தொடுத்தல், புகழ்ந்து பாடுதல் முதலிய உடம்பின் தொழில்களாக நிகழ்வது. இதன் இயல்பினே,

  • துண்னென விரும்பு சரியைத் தொழிலர் தோணிபுரமாமே

(3-81-7)

கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி (2–43-5)

என வரும் தொடர்களால் திருஞான சம்பந்தரும்,

  • பெரும்புலர் காலேமா இல பித்தர்க்குப் பத்தராகி

அரும்பொடு மலர்கள் கொண்டாங்கார்வத்தையுள்ளே

ാഖ്ള ♔ விரும்பி நல் விளக்குத்துபம் விதியினுல் இடவல்லார்க்குக் கரும்பினிற் கட்டிபோல்வார் கடவூர் வீரட்டஞரே

{4–31–4)

விளக்கினர் பெற்ற இன்பம் மெழுக்கினுற் பதிற்றியாகும் துளக்கில் நன்மலர் தொடுத்தால் தூயவிண்னேற லாகும் விளக்கிட்டார் பேறுசொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்

அளப்பில கீதஞ்சொன்ஞர்க் கடிகள்தாம் அருளுமாறே ’

(4–77–3)

  • நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா

நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்

பூமாலே புனேந்தேத்திப் புகழ்ந்து படித் தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்

சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலேபுனல் சேர் செஞ்சடையெம் மாதி யென்னும்

ஆரூரா என்றென்றே அவருநில்லே " (6–31–3)

எனத் திருநாவுக்கரசரும் விளக்கியுள்ளமை காணலாம்.