பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/869

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெறிக்கொள்கைகள் 8翁翼

யாகச் சென்று கடலிற் கலந்து உவர்த்தன்மை பெற்ற நீரானது, கடலோதத்தால் மீளவும் ஆற்று நீருடன் கலந்தபொழுது அந்நீரையும் உவர்ப்புச் சுவையுடைய தாகச் செய்வதுபோன்று, சித்தம் சிவமாகப் பெற்ற ஞானிகளது உ ண ர் வு இறையருட்பெருக்கால் உல் கியலிலே மீளவும் கலக்க நேரிட்டால் அக்கலப்பு, பாசப் பிணிப்புடைய மக்களுடைய மலமாயை கன்மங் களேயும் நீக்கி நலஞ்செய்யும் ஆற்றலுடையது என்பர். இச் செய்தி,

“ஆற்ருல் அலேகடற்கே பாய்ந்த நீர் அந்நீர்மை

மாற்றி அவ்வாற்ருன் மறித்தாற்போல்-தோற்றிப் புலன்களெனப்போதம் புறம்பொழியில் நந்தம் மலங்களற மாற்றுவிக்கும் வந்து ’ (திருக்களிற் 11)

என வரும் பாடலால் அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு தற்போதங்கெட்டு இறைவன் திருவரு ளில் அழுந்தியவர்களே திருஞானசம்பந்தர், திரு நாவுக்கரசர், நம்பியாரூரர், மாணிக்கவாசகர் முதலிய சைவசமய ஆசிரியர்களாவர். இவர்கள் இவ்வுலகியல் வாழ்வில் உயிர்கள் அடையும் துயரங்களே எண்ணிய நிலேயில் இப்பெருமக்களது திருவாயிலிருந்து நம்மனே ருடைய மும்மலங்களேயும் மாற்றும் அருமருந்தாக வெளிவந்த அருளுரைகளே தேவாரம், திருவாசகம் முதலிய அருள் நூல்கள் என்பது முன்னர் விளக்கப் பெற்றது.

சிவஞானச் செல்வர்களாகிய இப் பெருமக்கள் , ஆன்ம போதங்கெட்டு, இறைவன் திருவருளே உலக மக்கள் அனேவரும் பெற்று இன்புறும் வண்ணம் சரியை கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை நன் னெறிகளே அறிவுறுத்தி அந்நெறிகளில் ஒழுகிக் காட்டி

யுள்ளார்கள்.