பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/891

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெறிக்கொள்கைகள் 373

  • அலுவகைச் சமயம் வைத்தார்”

‘முறை முறை நெறிகள் வைத்தார்”

“ஏணிப்படி நெறி யிட்டுக் கொடுப்பன

.ஐயாறன் அடித்தலமே'

என வரும் அப்பரடிகள் வாய்மொழிகளால் இனிது புலம்ை.

பலவகைச் சமயங்களிலிருந்தும் இ ைற வனே உண்மையாகப் போற்றும் மெய்யடியார்கள் எங்கே னும் யாதாகிப் பிறந்திடினும் அவரவர் தினத்த திருமேனிகொண்டு அங்கங்கே தோன்றி அருள் செய்தல் சிவபெருமானது இயல்பென்பதனே,

"எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு

இங்கே என்று அருள்புரியும் எம்பெருமான்’

எனத் திருஞானசம்பந்தரும்,

"ஆரொருவர் உள்குவார் உள்ளத்துள்ளே

அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்

எனத் திருநாவுக் கரசரும்,

"அறிவின்ை மிக்க அறுவகைச் சமயம்

அவ்வவர்க்கு அங்கே யாரருள் புரிந்து'

என நம்பியாரூரரும் கூறுமாற்ருல் தெளிய அறியலாம்.

"யாதொர் தேவர் எனப்படுவார்க் கெல்லாம்

மாதேவன் அலாற் றேவர் மற்றில்லேயே’

என வும்,

‘விரிவிலா அறிவினர்கள் வேருெரு சமயம் செய்து

எரிவினுற் சொன்குரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்’

எனவும் வரும் திருநாவுக்கரசர் அருளுரைகளைக் கூர்ந்து நோக்குங்கால், பல சமயங்களால் போற்றப்