பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/895

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெறிக்கொள்கைகள் 877

ஒன்று உண்டு என்பது அவர் தமக்கு உடன்பாடு அன்று எனவும், அவரால் மலமெனக் குறிக் கப்படுவது மாயையேயா மெனவும் கருதுவர் சிலர், தேவார ஆசிரியர்கள் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மையை மேற் கொண்டவர்களென்பது,

"பாலகும் விருத்தனும் பசுபதிதாளும்’ [1–76–8] எனவும்,

'பசுபதியின் மிசைவருபசுபதி? எனவும்,

“பாசமதறுத்து’ T8–79–10] எனவும் வரும் திருப்பதிகத் தொடர்களால் இனிது உணரப்படும்.

இனி, ஆணவம், கன்மம், மாயை என மலம் மூன்று என்று விரித்துக் கூறப்படாவிடினும் மலம் ஒன்றுக்கு மேற்பட்டுள்ளன என்பது,

'தவமாம் மலமாயின தானறுமே” எனப் பன்மை வில் வழங்கப்படுதலால் தெளியப்படும். எனவே, உயிர் களேப் பற்றிய மலம் முன்றெனல் தேவார ஆசிரியர் களுக்கும் உடன்பாடென்பது புலனும், ம்லமாயின? என்றதால் பன்மையே கொள்ளப்படுமன்றி மூன்று என்னும் தொகையினே அத்தொடர் குறிக்கவேண்டும் என்னும் நியதியில்லாமையால் அத்தொடராற் குறிக்கப் படுவன கன்மம், மாயை ஆகிய இரண்டுமே யாம் எனின், சைவ சித்தாந்த நூல்களால் அறிவுறுத்தப் படும் ஆணவமலத்தியல்பு உயிர்கள்பால் அமைந் திருப்பதாகத் தேவார ஆசிரியர்களாற் கூறப்பட்டால் ஆவண மலத்துண்மை அவ் ஆசிரியர்கட்கு உடன் பாடாதல் கொள்ளப்படும். ஆதலின் சைவ சித்தாந்தி கள் கூறும் மும் மலத்தியல்பினே ஒரு சிறிது நோக்குவோ

盘臀丐、