பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/896

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

878

பன்னிரு திருமுறை வரலாறு


எண்ணிறந்த சத்திகளான் எண்ணிறந்த உயிர் களினும் செம்பிற் களிம்பும், நெல்லின் உமியும் போல அநாதியே விரவி நிற்பதொன்ருய், கேவலத்தின் அவ் வுயிர்களின் அறிவோடு தொழிலே மறைத்து நின்று, சகலத்தில் போக நுகர்ச்சி வினைமுதல் ஆதல் தன்மையை நிகழ்த் தி, அறியாமை நிகழ்ச்சிக்குக் காரணமாய் நிற்பது ஆணவமலம் என்பர். இஃது உயிரை அணுத்தன்மைப்படுத்து மறைப் பதாகலின் ஆணவம் என்னும் பெயர்த்தாயிற்று. ஆணவ மலம் ஆன்மாக்களேவிட்டுப் பிரியாது அநாதியே உயிரின் இயல்பாக அவற்றைத் தொடர்ந்துள்ளமையால் பசுத் துவம் எனவும் வழங்கப்படும். உயிர்களே அறியாமை இருளிற் படுத்து மறைப்பதாகலின் இதனே இருண்மலம் என வழங்குதல் தமிழ்மரபு. கன்மம் ஆவது ஆணவத் தால் உயிர்களிடத்து எழுந்தவிருப்பினேஉடையதாய்ப் போக நுகர்ச்சிக்கு ஏதுவாகி உயிரைப் பிறவியுட் படுத்துவதாகும். இக்கன்மமலத்து இயல்பு மொய்த்து இருண்டு பந்தித்து நின்றபழவினை என வரும் அப்பர் அடிகள் வாய்மொழியில் விளக்கப்பெறுதல் காணலாம். எண்ணரிய சத்தியுடையதாய் உயிர்களின் அறிவொடு தொழில் ஆர்த்துப் பந்தித்து நிற்கும் இருள்மலத்தால் உளவாகிய பழவினை’ என்பது இத்தொடரின் பொருள். மாயாமலமாவது உவர் மண்ணுகிய அழுக்கைக் கொண்டு உடையின் அழுக்கை நீக்குதல் போல உயிர் கஜாப் பற்றிய ஏனே மலங்களே அகற்றுதற்கு மருந்தாய் இறைவல்ை உயிர்களுக்குக் கொடுக்கப்பட்டு அவற்றிற் குச் சிறிது அறிவு நிகழ்ச்சியைத் தருவது என்பது சைவசித்தாந்த சமயத்தினரது கொள்கையாகும்.

ஞானசம்பந்தப் பிள்ளையார் ஆணவம், கன்மம், மாயை ஆகிய இம் மூன்றின் இயல்பையும் உடம்பொடு புணர்த்துக் கூறியதுடன் இம்மூன்று மலங்களையும் தவிர்ப்போன் முதல்வனகிய இறைவனே என்பதனே,