பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/901

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. தேவாரப் பதிகங்களிற் குறிக்கப்பெற்ற திருத்தலங்கள்

இறைவனே வழிபடுதற்கென ஊர்தோறும் திருக் கோயில்களே நிறுவிப் போற்றுதல் எ ன் பது, த மி ழ் க த் தி ல் நெடுங்காலமாக நிலைபெற்றுவரும் நாட்டுப்பண்பாகும். மக்கட்குலத்தார் தெய்வம் ஒன்று உண்டு என்னுந் தெளிவுபெற்ற தொன்மைக்காலந் தொட்டே தமிழ்நாட்டில் திருக்கோயில்கள் பல தோன்றி நிலைபெற்றுள்ளன. தேசம் உமை அறிவ தற்கு முன்னே பின்னே திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே எ ன வ ரு ம் திருத்தாண்டகத் தொடர், திருவாரூர், தில்லே முதலிய தமிழ்நாட்டுத் திருக்கோயில்களின் தொன்மையை உணர்த்திநிற்றல்

அறியத் தக்கதாகும்.

உலகமக்கள் பசியும் பிணியும் பகையும் நீங்கி நல்வாழ்வுபெற்று மகிழ்தற்கு, ஊர் தோறும் அமைந்த திருக்கோயில் வழிபாட்டு முறையே பெருந்துணை புரிந்து வருகின்றது. எவ்வுயிர்க்கும். அம்மையப்பராய் விளங்கும் இறைவனே த் த்ன்னெப்பாரில்லாத் தலேவ் கை நினைந்து போற்றி உலகமக்கள் அனைவரும் இகலின்றி அன்புடையராய் வாழ்தற்கு ஊக்கமளிக்கும் திருவருள் நிலையமாகத் திகழ்வன இத்திருக்கோயில் களேயாகும். இத்தகைய திருக்கோயிலைப் பெருத ஊர்கள், நிலவளம் நீர் வளங்களாலும் செல்வப் பெருக்காலும் எத்துணேச் சிறப்புற்றிருந்தாலும், அங்கு வாழும் மக்கள் உள்ளத்திலே அன்பும் அருளுமாகிய திருத்தகு நற்பண்புகளே வளர்க்கும் தெய்வத்தன்மை யாகிய சிறப்பினப் பெருமையால் அவையெல்லாம் மக்கள் அன்பினுற் கலந்து வாழ் தற்கேற்ற திருவுடைய