பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/902

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

884

பன்னிரு திருமுறை வரலாறு


ஊர்கள் ஆக மாட்டா என்றும், கொடிய விலங்குகள் வாழும் காடுகளாகவே அவற்றைக் கருதி நீங்குதல் வேண்டும் என்றும் சான்றேர் கூறுப.

'திருக்கோயில் இல்லாத திருவிலூரும்

திருவெண்ணி றணியாத திருவிலூரும் பருக்கோடிப் பத்திமையாற் பாடாவூரும்

பாங்கிளுெடு பலதளிகள் இல்லாவூரும் விருப்போடு வெண்சங்கம் ஊதாவூரும்

விதானமும் வெண் கொடியும் இல்லாவூரும் அருப்போடு மலர் பறித்திட் டுண் ணுவூரும்

அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே'

என வரும் திருத்தாண்டகத்தாலும்,

'கோயிலில்லா ஆரிற் குடியிருக்க வேண்டாம்”

என வழங்கும் உலக நீதியாலும் இக்கருத்து வலியுறுத் தப்பட்டுள்ளமை காணலாம்.

முற்காலத்தில் குறிஞ்சி, முல்லே, மருதம், நெய்தல் என வகுக்கப்பட்ட நால்வகை நிலத்தும் அவ்வந் நில மக்களால் தெய்வ வழிபாடுகள் சிறப்புற நிகழ்த்தப் பெற்றன என்பது, ஆசிரியர் தொல்காப்பியனுர்,

"தெய்வம் உணுவே மாமரம் புள் பறை

செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப’ (தொல்-அகம்)

என வரும் கருப்பொருட் சூத்திரத்தில், உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத உணவுக்கு முன் .ெ த ய் வ த் ைத முதன்மையுடையதாக முன்னர்க் கூறுதலால் இனிது விளங்கும். தொல்காப்பியனர் காலத்தில் காடுறை யுலகமாகிய முல்லே நிலத்தில் மாயோனுகிய திருமால் வழிபாடும், மைவரையுலகமாகிய குறிஞ்சி நிலத்தில் சேயோளுகிய முருகன் வழிபாடும், தீம்புனலுலகமாகிய